விஜய்யின் தளபதி 69 டைட்டில் சாங்.. களைகட்டும் தளபதி கச்சேரி.. சூட்டிங் எங்க நடக்குது தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 படத்தின் பூஜை போடப்பட்டு தற்போது சென்னையில் இதன் சூட்டிங் துவங்கியுள்ளது. விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ள நிலையில், மமிதா பைஜு இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் விஜய்யின் தங்கையாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு தீபாவளியையொட்டி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நேற்றைய தினம் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து சில தினங்கள் இந்த சூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

vijay thalapathy 69 movie thalapathy kacheri song


நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தளபதி 69 படம் அவரது கடைசி படமாக உருவாகவுள்ள நிலையில், இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதும் அனிருத் இசையமைக்கவுள்ளதும் கடந்த மாதத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள் படத்தின் நடிகர், நடிகைகளை தயாரிப்பு தரப்பான கேவிஎன் புரொடக்ஷ்ன்ஸ் அறிமுகப்படுத்தியது. படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே ஜோடி சேரவுள்ள நிலையில், மமிதா பைஜு, நரேன், பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தளபதி 69 படம்: நேற்று முன்தினம் இந்தப் படத்தின் பூஜை, சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்த நிலையில், நேற்றைய தினம் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கியுள்ளது. தொடர்ந்து இந்த சூட்டிங் ஒருவார காலம் நடக்கவுள்ளதாகவும் படத்தின் பாடல் காட்சிக்கான சூட்டிங் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் சூட்டிங் பையனூரில் நடந்து வருவதாகவும் இந்தப் பாடலின் டைட்டில் தளபதி கச்சேரி என்று துவங்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்பாடல் காட்சிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கவுள்ளதாகவும் விஜய், பூஜா ஹெக்டே இந்தப் பாடலில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தளபதி 69 டைட்டில் சாங்: முன்னதாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் வெளியான வாத்தி கம்மிங் பாடலை போலவே இந்தப் பாடலும் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஷெட்யூலில் விஜய்யுடன் நடிகர் பாபி தியோல் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தன்னுடைய கட்சி மாநாட்டிற்கான வேலைகளிலும் விஜய் பிசியாகியுள்ளார். இரண்டு விஷயங்களிலும் சரியாக ஃபோகஸ் செய்து வருகிறார். இரண்டையும் சரியாக அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 69 படம் அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தளபதி 69 படத்தின் கதை: இதனிடையே இந்தப் படம் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில், படத்தில் சமூக கருத்துக்கள் அதிகமாக இருந்தது. படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் கதைக்களத்தை ஹெச் வினோத், தளபதி 69 படத்தில் பயன்படுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் ரசிகர்களுக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X