Actor Vikram: ரெடி ஜூட்.. துவங்கியது வீர தீர சூரன் பட சூட்டிங்.. வீடியோ வெளியிட்ட விக்ரம்!
சென்னை: நடிகர் விக்ரம், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் வீர தீர சூரன். விக்ரமின் 62வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்ரம் பிறந்த நாளையொட்டி டைட்டில் பிரமோவுடன் வெளியிடப்பட்டது. ரசிகர்களை இந்த பிரமோ மிகச் சிறப்பாக கவர்ந்த நிலையில் 8 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் சூட்டிங் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சூட்டிங் ஸ்பாட் வீடியோவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். படத்தில் விக்ரம், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சூழலில் கிராமத்து கெட்டப்பில் விக்ரம் பிரமோக்களில் காணப்படுகிறார். இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள சூட்டிங் ஸ்பாட் வீடியோவிலும் அவர் கிராமத்து கெட்டப்பில் கெத்தாக காணப்படுகிறார்.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் தன்னுடைய மிகப்பெரிய உழைப்பு மற்றும் டெடிகேஷன் ஆகியவற்றால் திரைத்துறையில் உயர்ந்து நிற்கிறார். சர்வதேச அளவில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவருடைய மகன் த்ருவ் விக்ரம் ஹீரோவாக வளர்ந்து நிற்கும் சூழலிலும் விக்ரமின் மவுசு ஹீரோவாக குறையவில்லை என்று கூறவேண்டும். கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படங்கள் அடுத்தடுத்து விக்ரம் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
அடுத்தடுத்த படங்கள்: விரைவில் இந்த படங்களில் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் மரண மாஸாக வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய சியான் 62 படத்திற்காக சித்தா பட இயக்குனர் அருண்குமாருடன் இணைந்துள்ளார் விக்ரம். இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் விக்ரம் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டது. டைட்டில் பிரமோவுடன் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. படத்திற்கு வீர தீர சூரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் விக்ரமுடன் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் இணைந்து நடிக்க உள்ளனர்.
வீர தீர சூரன் பட சூட்டிங் துவக்கம்: இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளதாக விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் தங்ளது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் அவர் இந்த பதிவில் இணைத்துள்ளார். மேலும் ரெடி ஜூட் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் கார்களில் வந்து இறங்குகின்றனர். தொடர்ந்து கேரவனுக்குள் சென்று தங்களது கெட்டப்பை டோட்டலாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். இருவருமே கிராமத்து கெட்டப்புகளில் மாற்றமாகி வந்து நடிக்க துவங்குகின்றனர்.
சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியீடு: தொடர்ந்து இயக்குனர் ஆக்சன் என்று கூறுவதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது. தொடர்ந்து அன்புடன் சம்பவம் ஆரம்பம் என்றும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. இன்றைய தினம் துவங்கியுள்ள இந்த சூட்டிங் ஒரே கட்டமாக எடுத்து முடிக்கப்பட்டு இந்த ஆண்டிலேயே படம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக விக்ரமின் தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











