Just In
Don't Miss!
- News
மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
- Automobiles
ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
சென்னை: MIK Productions (P) Ltd சார்பில் விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இணையும் படம் MIK Production No 1 இன்று பூஜையுடன் துவங்கியது
பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் MIK Productions No 1 இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

P இளையராஜா தயாரிக்கும் இந்தப்புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தடம், தாராளபிரபு படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது.
பல வெற்றி படங்களில் தனது சிறந்த ஒளிப்பதிவை வழங்கிய வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு பெயர்பெற்ற கனல் கண்ணன் இப்படத்தின் பைட் கொரியாகிராபராக பங்கேற்கிறார். இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் firstlook போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நாயகன் விமல், நாயகி - தான்யாஹோப் மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது தொழில்நுட்ப கலைஞர்கள் MIK Productions (P) Ltd P. இளையராஜா, குட்டிப்புலி சரவண சக்தி இப்படத்தை இயக்க உள்ளனர். மேலும், வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு. எடிட்டர் : கோபி கிருஷ்ணா, ஸ்டண்ட்: கனல் கண்ணன், ஆர்ட் டைரக்டர் : ஜெயகுமார் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கர்ண ராஜா, புரொடக்சன் எக்ஸிகியூட்டிவ்: தர்மராஜ் மாணிக்கம் மக்கள் தொடர்பு : P. தியாகராஜன்.