துருக்கியில் பைக் விபத்து... "புது மாப்பிள்ளை" விஷாலுக்கு காயம்... படப்பிடிப்பு ரத்து!

சண்டைக்காட்சியின் போது நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.

Recommended Video

Actor Vishal : படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகர் விஷால்- வீடியோ

சென்னை: துருக்கியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், நடிகர் விஷாலுக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு, தெலுங்கு ரீமேக்கான அயோக்கியாவில் விஷால் நடித்துள்ளார். அந்த படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.

இதையடுத்து அவர் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

படப்பிடிப்பில் விபத்து

படப்பிடிப்பில் விபத்து

தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. பைக், கார் சேசிங் காட்சி படமாக்கப்பட்ட போது, விஷால் சென்ற அதிவேக வெளிநாட்டு பைக், திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

கை, காலில் காயம்

கை, காலில் காயம்

இதில் விஷாலுக்கு இடது கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு ரத்து

இதனால் விஷால் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. படக்குழு வேறு சில காட்சிகளை படமாக்கி வருகிறது. விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண நிச்சயதார்த்தம்

திருமண நிச்சயதார்த்தம்

ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும், விஷாலுக்கும் சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற இருந்த நிலையில், விஷாலுக்கு விபத்து ஏற்பட்டுள்ளதால் இருவீட்டாரும் கவலை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X