நடிகர்கள் விஜய் - சூர்யா திடீர் சந்திப்பு... எங்க மீட் பண்ணியிருக்காங்கன்னு பாருங்க மக்களே!

சென்னை: நடிகர்கள் சூர்யாவும் விஜய்யும் திடீரென படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக்கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் சூர்யா. இருவருமே படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சென்னை மற்றும் டெல்லியில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

சன் ஸ்டூடியோ

சன் ஸ்டூடியோ

பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சூரியாவின் எதற்கும் துணிந்தவன்

சூரியாவின் எதற்கும் துணிந்தவன்

இந்நிலையில் அதே சன் ஸ்டூடியோவில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது.

நட்பு ரீதியாக சந்திப்பு

நட்பு ரீதியாக சந்திப்பு

இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் நடிகர்கள் விஜய் சூர்யா ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு நட்பு ரீதியான என கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதோடு தங்களின் படம் தொடர்பாக பேசிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

Mughizh Review by Poster Pakiri | Vijay Sethupathi | Sreeja | Regina Cassandra | Filmibeat Tamil
இரண்டு படங்களில் இணைந்து

இரண்டு படங்களில் இணைந்து

நடிகர் விஜய்யும் சூர்யாவும் நேருக்கு நேர் மற்றும் ஃபிரண்ட்ஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்ததாக இயக்குநர் பாண்டிராஜ் டிவிட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X