மாவீரன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிதி ஷங்கர்!

சென்னை : சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதிதி ஷங்கர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விருமன் படத்தைத் தொடர்ந்து அதிதி இரண்டாவதாக சிவகார்த்திக்கேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில், நடிகை சரிதா,இயக்குனர் மிஸ்கின் வில்லனாகவும், யோகி பாபு, யூடியூப் பிரபலம் மோனிஷா பிளெஸ்ஸி போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சிவகார்த்திகயேன்

சிவகார்த்திகயேன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் முழுக்க காமெடியாக இருந்து ரசிகர்களை வயிறுவலிக்க சிரிக்க வைத்தது. டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது.

காற்று வாங்கிய பிரின்ஸ்

காற்று வாங்கிய பிரின்ஸ்

டாக்டர், டான் வெற்றிப்படங்களை படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் தீபாவளி பாண்டியை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் நெகடிவ் விமர்சனங்களால், திரையரங்கு வந்த சில நாட்களிலேயே காற்று வாங்கியது.

ஷூட்டிங் நிறுத்தப்பட்டதா?

ஷூட்டிங் நிறுத்தப்பட்டதா?

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், இயக்குநருக்கும் சிவகார்த்தியேனுக்கும் இடையே பட காட்சிகளை மாற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

இந்நிலையில், அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராமில் மாவீரன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இயக்குநருடனான மோதல் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்தி பரவி வரும் நேரத்தில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போட்டோ மூலம் தக்கபதிலடி கொடுத்துள்ளார்.

அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த கார்த்தியின் விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த கார்த்தியின் விர்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X