twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை!

    நடிகை அனுபமா படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    By Staff
    |

    Recommended Video

    படப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு | Actress Anupama went unconscious in shoot

    ஐதராபாத்: நடிகை அனுபமா தெலுங்கு பட படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

    Actress Anupama went unconscious in shoot

    தமிழில் தனுஷின் கொடி திரைப்படத்தில் மூலம் அறிமுகமானவர் அவர். தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக உள்ள அனுபமா, இயக்குனர் திரினாத ராவ் நக்கினே இயக்கத்தில் ஹலோ குரு ப்ரேமகோசமே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் நடிகை அனுபமா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    நடிகர் பிரகாஷ்ராஜுடன் வசனம் பேசி நடித்துக்கொண்டிருந்த அனுபமா திடீரென மயங்கி விழுந்துள்ளார். படக்குழுவினர் உடனடியா அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். ஏற்கனவே குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அனுபமாவுக்கு, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அயர்வால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Actress Anupama fell down unconsciously in shooting spot. Anupama who has been introduced in Premam movie. After that she appeared in Dhanush kodi. She has participated in shoot with fever cause to be unconscious said medical report.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X