குட்டிக்கரணம் அடிக்கும் போது தவறிவிழுந்தார்... நடிகை ஹன்சிகாவுக்கு காயம்!

மஹா படத்தின் சண்டைக்காட்சியில் நடிகை ஹன்சிகா காயமடைந்தார்.

சென்னை : மஹா படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகை ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டது.

குட்டி குஷ்பு ஹன்சிகாவை பற்றி தான் இரு தினங்காக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. மியாமி கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது ஹன்சிகா எடுத்துகொண்ட அந்தரங்க செல்பிக்கள் நேற்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தனது போனையும் டிவிட்டர் கணக்கையும் யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என ஹன்சிகா புலம்பினார். இந்நிலையில் அவரை பற்றிய மற்றொரு பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.

Actress Hansika gets injured in Maha’s Daring stunt sequence

அதாவது மஹா படத்தின் சண்டைக்காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது ஹன்சிகா காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹா படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சி திங்களன்று படமாக்கப்பட்டது. அப்போது நடிகை ஹன்சிகா தரையில் குட்டிக் கரணம் அடிக்க வேண்டும். ஒரு சிறு கால இடைவெளியில் அது தவறாக அமைந்து, சிறிய காயத்தில் முடிந்தது.

Actress Hansika gets injured in Maha’s Daring stunt sequence

விரைவான முதல் உதவி மற்றும் குழுவின் ஆதரவு ஹன்சிகாவை அந்த சம்பவத்தில் இருந்து மிக விரைவில் மீட்டது. திரும்ப திரும்ப சொல்லப்பட்ட ஆலோசனைக்கு பின்னரும் கூட, ஹன்சிகா எந்தவொரு கையசைவும் இன்றி அந்த காட்சியில் நடித்தார்.

"மஹா" நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படம். இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25வது திரைப்படமாகும். நாயகியை மையப்படுத்திய கதையில் முதன்முறையாக ஹன்சிகா நடிக்கும் இந்த 'மஹா'வை யூ ஆர் ஜமீல் இயக்குகிறார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி மதியழகன் தயாரித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X