படப்பிடிப்பில் சாமியாடிய நடிகை... அடக்க முடியாமல் தவித்த படக்குழு!
நடிகை மனிஷா யாதவ் படப்பிடிப்பில் சாமியாடினார்.
Recommended Video

சென்னை: சண்டிமுனி படத்தின் பாடல் காட்சியில், நடிகை மனிஷா யாதவ் ஆக்ரோஷமாக சாமியாடினார்.
சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் சிவராம் குமார் தயாரிக்கும் படம் சண்டிமுனி. சதுரங்க வேட்டை நட்ராஜ் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவும் நடிக்கின்றனர். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வாசுவிக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபிபாபு, விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி,மேட்டூர் சேகர் உள்ளிட்டோரும் இவர்களுடன் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் மில்கா செல்வகுமார்.
சண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. பழனி கொடைக்கானல் நெய்க்காரன்பட்டி பொள்ளாச்சி வால்பாறை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றுள்ளது.

சண்டிமுனி ஷூட்டிங்
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கத்தில் முனீஸ்வரன் கோயில் போல் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 30 அடி உயரத்துக்கு முனீஸ்வரன் சிலை அமைக்கப்பட்டு, பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

சாமியாடிய மனிஷா
அப்போது நடிகை மனீஷா யாதவ் "பெரும் கோபக்காரா எங்க சண்டி வீரா... தொல்லை தீர்க்க வாடா... ஆவி ஓட்ட வாடா" என பாடிக்கொண்டே ஆக்ரோஷமாக நடனமாடும் காட்சி எடுக்கப்பட்டது. அப்போது அதில் நடித்த மனிஷா உண்மையிலேயே சாமியாடுவது போல் ஆக்ரோஷமாக நடித்தார். இதை பார்த்து வியந்த படக்குழுவினர், மனிஷாவுக்கு உண்மையிலேயே சாமி அருள் வந்துவிட்டது என பேசிக்கொண்டனர்.

இது ஒரு திகில் படம்
சண்டிமுனி படம் குறித்து பேசிய இயக்குனர் செல்வகுமார், " இது ஒரு திகில் படம். நட்ராஜ் - மனீஷா யாதவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் நட்ராஜுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுபடவும் இருவருக்கும் திருமணம் நடக்கவும் குல தெய்வ வழி பாட்டு காட்சி தான் தற்போது எடுக்கப்பட்டது" என்றார்.
என்ன நிலைமை
இந்த பாடல் காட்சியில் 40 நடன கலைஞர்கள், 300 துணை நடிகர் நடிகைகள் பங்கேற்க அசோக்ராஜா நடன அமைப்பில் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது. இந்த பாடல் காட்சியில் தீ மிதி காட்சிகளும், ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











