காருக்குள் சிக்கிக் கொண்ட நயன்தாரா.. எப்படி தப்பிச்சாரு தெரியுமா?

மும்பை : நடிகை நயன்தாரா திருமணம், ஹனிமூன் உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு தற்போது சூட்டிங்கிற்கு திரும்பியுள்ளார்.

ஷாருக் -அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தின் சூட்டிங்கில்தான் தற்போது நயன்தாரா பங்கேற்றுள்ளார். இதற்காக மும்பைக்கு விசிட் அடித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்னதாகவே அவரது சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது ஷாருக்குடனான அவரது காம்பினேஷன் காட்சிகளை படமாக்க அட்லி திட்டமிட்டுள்ளாராம்.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி இவர்களது திருமணம் மகாபலிபுரம் ரெசார்ட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒரு பைசா செலவில்லாமல் இந்த ஜோடி தங்களின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

திரையுலக பிரபலங்கள்

திரையுலக பிரபலங்கள்

தங்களது திருமண வீடியோவை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு விற்று அதன்மூலம் பல கோடிகளை வசப்படுத்தியுள்ளது நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி. இந்தத் திருமணத்தில் ரஜினி, ஷாருக், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர்கள் அட்லி, கௌதம் மேனன், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்களையும் திருமணத்தில் பார்க்க முடிந்தது.

 தினந்தோறும் புகைப்படங்கள்

தினந்தோறும் புகைப்படங்கள்

திருமணத்தை தொடர்ந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இவர்கள், தொடர்ந்து நயன்தாராவின் அம்மா வீட்டில் சில தினங்களும் ஹனிமூனில் சில தினங்களும் செலவிட்டது. இதன் புகைப்படங்களை தினந்தோறும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டு ஏராளமான லைக்ஸ்களை அள்ளினார்.

மீண்டும் சூட்டிங்

மீண்டும் சூட்டிங்

தொடர்ந்து தாய்லாந்து ஹனிமூன் ட்ரிப்பிலிருந்து நாடு திரும்பிய இந்த ஜோடி, தங்களது படங்களில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடிப்பில் இணைந்துள்ள ஜவான் படத்தின் சூட்டிங்கிற்காக மும்பை சென்றுள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங்கில் திருமணத்திற்கு முன்னதாகவே அவர் இணைந்திருந்தார்.

ஜவான் படத்தின் சூட்டிங்

ஜவான் படத்தின் சூட்டிங்

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை அட்லி படமாக்கியுள்ளார். தொடர்ந்து ஷாருக்குடனான காம்பினேஷன் காட்சிகளிலும் நயன்தாரா நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் 60 சதவிகிதம் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சில மாதங்களில் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

காரில் சிக்கிய நயன்தாரா

காரில் சிக்கிய நயன்தாரா

முன்னதாக படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக மும்பை சென்ற நயன்தாரா சூட்டிங்கில் பங்கேற்பதற்காக காரில் சென்றபோது அவரை அடையாளம் கண்டுக் கொண்ட ரசிகர்கள் மற்றும் மீடியாவினர் அவரை புகைப்படம் எடுக்க முயன்றனர்.

நயன்தாரா போஸ்

நயன்தாரா போஸ்

இதனால் நயன்தாரா வெளியில் வரமுடியாதபடி லாக் செய்யப்பட்டது. புகைப்படம் எடுக்கக்கூடாது என்று பவுன்சர்கள் தடுத்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது. இதையடுத்து அவர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காருக்குள் இருந்தபடியே நயன்தாரா புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார்.

பாலிவுட் என்ட்ரி

பாலிவுட் என்ட்ரி

இதையடுதது புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்கள் நயன்தாரா கார் செல்ல அனுமதி அளித்துள்ளனர். நயன்தாராவின் பாலிவுட் என்ட்ரி படமான இந்தப் படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அட்லிக்கும் பாலிவுட்டில் இது முதல் படம் என்பதால் இந்தப் படத்தை அவர் எவ்வாறு எடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 ஏகே62வில் நயன்தாரா?

ஏகே62வில் நயன்தாரா?

இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொண்டு நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படத்தில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்தப் படத்திலும் நயன்தாராதான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X