எருமையை தடவி தடவி விளையாடும் ஸ்ருதி ஹாசன்.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் எருமை மாட்டை தடவி தடவி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக உள்ளார். இந்த லாக்டவுன் நேரத்திலும் நடிகை ஸ்ருதி ஹாசன் ரொம்பவே பிஸியாக இருந்தார்.
தன்னை ஃபிட்டாக வைத்துக்கொள்வது தனக்கு பிடித்த உணவுகளை சமைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவது என இந்த லாக்டவுன் நேரத்தை பயன்படுத்திக் கொண்டார்.
ஸ்ருதி ஹாசன்.

லாபம் படத்தில்..
மேலும் பாடல்களையும் பாடியும் ரசிகர்களை சமூக வலைதளங்களில் குஷிப்படுத்தி வந்தார். ஸ்ருதி ஹாசன் நடிகர் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்டது.

எருமையுடன் விளையாட்டு
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், லாபம் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் வீடியோக்களை த்ரோ பேக் செய்துள்ளார். அதில் எருமையை தொட்டு தடவி விளையாடி கொஞ்சியுள்ளார் ஸ்ருதி ஹாசன். மேலும் அதனுடன் பேசும் ஸ்ருதி ஹாசன் அந்த எருமைக்கு ரூபர்ட் என்று பெயர் வைத்துள்ளார்.

எஸ்பி ஜனநாதன்
இந்தப் படத்தில் பண்ணை நிலங்களை கையகப்படுத்தும் தொழிலதிபர்களுக்கு எதிராக போராடும் ஒரு சமூக ஆர்வலராக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் இந்த போராட்டத்தில் விஜய் சேதுபதிக்கு உதவுகிறார். இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் இயக்குகிறார்.

லாக்டவுனுக்கு பிறகு
லாபம் படத்தில் கலையரசன், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன், உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படம் லாக்டவுன் பிரச்சனைக்கு பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











