நமக்கே பயந்து வருது.. மிரட்சியுடன் பார்க்கும் சோனியா அகர்வால்.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

சென்னை: நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சோனியா அகர்வால் சண்டிகரை பூர்விகமாக கொண்டவர். தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சண்டு என்ற கன்னட படத்தில் அறிமுகமானர் நடிகை சோனியா அகர்வால். இந்தப் படத்தில் நடிகர் சுதீப்புக்கு ஜோடியாக நடித்தார்.

தனுஷுடன் காதல் கொண்டேன் படம்

தனுஷுடன் காதல் கொண்டேன் படம்

தொடர்ந்து தமிழிலும் என்ட்ரி கொடுத்த சோனியா அகர்வால் தான் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். செல்வராகவன் இயக்கிய இந்தப் படத்தில் திவ்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் சோனியா அகர்வால். இந்தப் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் சோனியா அகர்வால்.

 தென்னிந்திய மொழிகளில் பல படங்கள்

தென்னிந்திய மொழிகளில் பல படங்கள்

இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார் சோனியா அகர்வால். பின்னர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால்.

7 ஜி ரெய்ன்போ காலனி

7 ஜி ரெய்ன்போ காலனி

தமிழில் விஜய், சிம்பு, தனுஷ், ஆர்யா, ஸ்ரீகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். காதல் கொண்டேன் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 7ஜி ரெய்ன்போ காலனி, கோவில், மதுரை, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

செல்வராகவனுடன் காதல் - திருமணம்

செல்வராகவனுடன் காதல் - திருமணம்

செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெய்ன்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்தார் சோனியா அகர்வால்.

கசந்த திருமணம் - விவாகரத்து

கசந்த திருமணம் - விவாகரத்து

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்தார் நடிகை சோனியா அகர்வால். பின்னர் தனது கணவர் செல்வராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் அவரை பிரிந்தார். 2010ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

போதை பொருள் தடுப்பு பிரிவினர்

போதை பொருள் தடுப்பு பிரிவினர்

தொடர்ந்து சினிமாவில் பிஸியாக உள்ளார் சோனியா அகர்வால். அண்மையில் கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் இருந்து 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

நிச்சயம் வழக்கு தொடருவேன்

நிச்சயம் வழக்கு தொடருவேன்

ஆனால் சில ஊடகங்கள் தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் போட்டோவுடன் செய்தி வெளியிட்டது. இதனால் கடுப்பான தமிழ் நடிகை சோனியா அகர்வால் இந்த செய்தியால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் கூறினார்.

கிராண்ட்மா - ஹாரர் படம்

கிராண்ட்மா - ஹாரர் படம்

இந்நிலையில் நடிகை சோனியா அகர்வால் தனது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சோனியா அகர்வால் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் கிராண்ட்மா என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களைதான் சோனியா அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பாவாடை சட்டையில் மொட்டை மாடியில்

பாவாடை சட்டையில் மொட்டை மாடியில்

இதன் ஒரு போட்டோவில் எதையோ மிரட்சியுடன் பார்க்கிறார் சோனியா அகர்வால். அதனை தொடர்ந்து மற்றொரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் சோனியா அகர்வால் அதில் மொட்டை மாடியில் இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில் பாவாடை சட்டையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார் சோனியா அகர்வால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X