பனிப்பொழிவுக்கிடையில் பனிமலராய் த்ரிஷா.. லியோ சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
ஸ்ரீநகர் : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ.
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு 60 நாட்கள் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சூட்டிங்கில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.

விஜய்யின் லியோ படம்
நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். விஜய்யின் 67வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

விஜய்க்கு ஜோடியான த்ரிஷா
இந்தப் படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடித்துவருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, விஜய்க்கு ஜோடியாகியுள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் லியோ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஜோடி 5வது முறையாக இணைந்துள்ளது.

5வது முறையாக ஜோடி
முன்னதாக கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்த இந்த ஜோடி தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் விஜய்யின் 67வது படம். அதேபோல த்ரிஷாவிற்கும் இது 67வது படமாக அமைந்துள்ளது ரசிகர்களுக்கு அதிகமான சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளது.

20 ஆண்டுகளை கடந்த த்ரிஷா
த்ரிஷா திரையில் நடிக்கத் துவங்கி 20 ஆண்டுகளை கடந்துள்ளார். இருந்தபோதிலும் தன்னுடைய அழகை சிறப்பாக மெயின்டெயின் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காஷ்மீரில் தற்போது அவர் சூட்டிங்கில் உள்ளார்.

காஷ்மீரில் த்ரிஷா
சமீபத்தில் படக்குழுவினருடன் சூட்டிங்கிற்காக காஷ்மீர் புறப்பட்டு சென்ற த்ரிஷா, திடீரென இடையில் சென்னை திரும்பினார். இது பல்வேறு யூகங்களுக்கு வழியை ஏற்படுத்தியது. ஆனால் காஷ்மீர் குளிர் காரணமாகவே அவர் சென்னை திரும்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சூட்டிங்கில் பங்கேற்றுள்ள த்ரிஷா, அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பனிப்பொழிவிற்கு இடையில் த்ரிஷா
சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினருடன் இணைந்து புகைப்படம் வெளியிட்ட த்ரிஷா, தற்போது பனிப்பொழிவுக்கு இடையில் தான் தனியாக இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பனிப்பொழிவுக்கு இடையில் புத்தம் புது ரோஜாவாக த்ரிஷா காணப்படும் இந்தப் புகைப்படம் ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











