twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சொந்தக் குரல் சுந்தரிகள் கோலிவுட்டில் இப்போது புது டிரெண்டு உருவாகி வருகிறது. ஆனால், உண்மையில் இது புதுசல்ல, பழைய கள்ளுதான்.அந்தக் காலத்தில் நடிப்பவர்கள் அவர்களது சொந்தக் குரலில் பேசியே நடிப்பார்கள். பலர் தாங்களே பாடவும் செய்தார்கள்.தமிழே தெரியாத தெலுங்கு, மலையாள நடிகைகள் கூட, எழுதி வைத்து, நன்றாக பிராக்டிஸ் செய்து, அழகான தமிழில் பேசிரசிகர்களை அசத்தினார்கள். ஆனால் இன்றைக்கோ நிலைமை தலைகீழ்.சுத்தத் தமிழச்சிகள் கூட சொந்தக் குரலில் பேசுவதில்லை. (பெரும்பாலும் தமிழ்ப் பெண்கள் நடிக்க வருவது இல்லை. அப்படியேவந்தாலும் தமிழுக்கு பதில் டமிள் தான் பேசுவார்கள்).தமிழ்ப் பெண்ணான த்ரிஷா கூட தனது படங்களில் டப்பிங் பேசுவதில்லை, அவருக்குக் குரல் கொடுப்பது இன்னொருவர்.அதேபோல தமிழ் பேச, எழுதப் படிக்கத் தெரிந்த ஸ்னேகாவும் சொந்தக் குரலில் பேசுவதில்லை.தமிழ் பேச, எழுதப் படிக்கத் தெரிந்த, மலையாளப் பெண்ணான அசினுக்கும் இரவல் குரல்தான். நயன்தாராவுக்கும் டப்பிங்குரல்தான். ஜோதிகாவில் ஆரம்பித்து இறக்குமதியான பெரும்பாலான நடிகைகளுக்குமே டப்பிங் குரல் தான் தரப்பட்டு வந்தது.ஆனால் இந்த நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.ஸ்னேகா, முதல் முறையாக ஏ.பி.சி.டி படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கிறார். தானே விரும்பி இதைச் செய்தாராம் ஸ்னேகா.அதற்காக அவரை தனியே பாராட்டலாம். ஏற்கனவே பார்த்திபன் கனவு படத்தில் அதிகம் பேசாத ஒரு கேரக்டருக்கு மட்டும்(படத்தில் இரட்டை வேடம்) அவரே பேசி நடித்தார்.ஆனால் முதல் முறையாக அவரது முழு கேரக்டருக்கும் ஏபிசிடி படத்தில் சொந்தக் குரலில் பேசி வருகிறாராம். இதை அறிந்துபுதுப்பேட்டை படத்திலும் அவரை சொந்தக் குரலிலேயே பேசுமாறு கேட்டுள்ளாராம் இயக்குனர் செல்வராகவன்.அதேபோல, மும்தாஜும் ஒரு படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறார். இதுதான் காதல் என்பதா என்ற படத்தில்மும்தாஜ், இந்தியில் வசனங்களை எழுதி வைத்துக் கொண்டு அதை தமிழில் பேசி அசத்துகிறாராம். ஜூனூன் தமிழ் போலஇல்லாமல் ரொம்ப நன்றாகவே பேசுகிறார் என்கிறார்கள்.மலையாள நவ்யா நாயரும், அமிர்தம் படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கிறார். இவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும்என்றாலும் இதுவரை எந்தப் படத்திலும் அவர் சொந்தக் குரலில் பேசியதில்லை. இப்போது முதல் முறையாக சொந்தக் குரலில்சம்சாரித்து வருகிறார்.ஜோதிகாவும் தொடர்ந்து இரவல் குரலில் பேசி கலக்கி வந்தார். முதல் முறையாக மாயாவி படத்தில் அவரே டப்பிங் பேசினார்.அடுத்தடுத்த படங்களிலும் அவரே பேச முடிவு செய்துள்ளாராம்.அதே போல வார்த்தைகளை பஞ்சு மிட்டாய் தின்பது மாதிரி வாய்க்குள்ளேயே கரைத்துக் கொள்ளும் உதித் நாராயண் போன்றஆசாமிகளை தமிழ் பாட்டு பாட விடாமல் யாராவது தடுத்து நிறுத்தினால் ரொம்ப புண்ணியமாய் போகும்.

    By Staff
    |

    கோலிவுட்டில் இப்போது புது டிரெண்டு உருவாகி வருகிறது. ஆனால், உண்மையில் இது புதுசல்ல, பழைய கள்ளுதான்.

    அந்தக் காலத்தில் நடிப்பவர்கள் அவர்களது சொந்தக் குரலில் பேசியே நடிப்பார்கள். பலர் தாங்களே பாடவும் செய்தார்கள்.

    தமிழே தெரியாத தெலுங்கு, மலையாள நடிகைகள் கூட, எழுதி வைத்து, நன்றாக பிராக்டிஸ் செய்து, அழகான தமிழில் பேசிரசிகர்களை அசத்தினார்கள். ஆனால் இன்றைக்கோ நிலைமை தலைகீழ்.


    சுத்தத் தமிழச்சிகள் கூட சொந்தக் குரலில் பேசுவதில்லை. (பெரும்பாலும் தமிழ்ப் பெண்கள் நடிக்க வருவது இல்லை. அப்படியேவந்தாலும் தமிழுக்கு பதில் டமிள் தான் பேசுவார்கள்).

    தமிழ்ப் பெண்ணான த்ரிஷா கூட தனது படங்களில் டப்பிங் பேசுவதில்லை, அவருக்குக் குரல் கொடுப்பது இன்னொருவர்.அதேபோல தமிழ் பேச, எழுதப் படிக்கத் தெரிந்த ஸ்னேகாவும் சொந்தக் குரலில் பேசுவதில்லை.

    தமிழ் பேச, எழுதப் படிக்கத் தெரிந்த, மலையாளப் பெண்ணான அசினுக்கும் இரவல் குரல்தான். நயன்தாராவுக்கும் டப்பிங்குரல்தான். ஜோதிகாவில் ஆரம்பித்து இறக்குமதியான பெரும்பாலான நடிகைகளுக்குமே டப்பிங் குரல் தான் தரப்பட்டு வந்தது.


    ஆனால் இந்த நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.

    ஸ்னேகா, முதல் முறையாக ஏ.பி.சி.டி படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கிறார். தானே விரும்பி இதைச் செய்தாராம் ஸ்னேகா.அதற்காக அவரை தனியே பாராட்டலாம். ஏற்கனவே பார்த்திபன் கனவு படத்தில் அதிகம் பேசாத ஒரு கேரக்டருக்கு மட்டும்(படத்தில் இரட்டை வேடம்) அவரே பேசி நடித்தார்.

    ஆனால் முதல் முறையாக அவரது முழு கேரக்டருக்கும் ஏபிசிடி படத்தில் சொந்தக் குரலில் பேசி வருகிறாராம். இதை அறிந்துபுதுப்பேட்டை படத்திலும் அவரை சொந்தக் குரலிலேயே பேசுமாறு கேட்டுள்ளாராம் இயக்குனர் செல்வராகவன்.


    அதேபோல, மும்தாஜும் ஒரு படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறார். இதுதான் காதல் என்பதா என்ற படத்தில்மும்தாஜ், இந்தியில் வசனங்களை எழுதி வைத்துக் கொண்டு அதை தமிழில் பேசி அசத்துகிறாராம். ஜூனூன் தமிழ் போலஇல்லாமல் ரொம்ப நன்றாகவே பேசுகிறார் என்கிறார்கள்.

    மலையாள நவ்யா நாயரும், அமிர்தம் படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கிறார். இவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும்என்றாலும் இதுவரை எந்தப் படத்திலும் அவர் சொந்தக் குரலில் பேசியதில்லை. இப்போது முதல் முறையாக சொந்தக் குரலில்சம்சாரித்து வருகிறார்.

    ஜோதிகாவும் தொடர்ந்து இரவல் குரலில் பேசி கலக்கி வந்தார். முதல் முறையாக மாயாவி படத்தில் அவரே டப்பிங் பேசினார்.அடுத்தடுத்த படங்களிலும் அவரே பேச முடிவு செய்துள்ளாராம்.

    அதே போல வார்த்தைகளை பஞ்சு மிட்டாய் தின்பது மாதிரி வாய்க்குள்ளேயே கரைத்துக் கொள்ளும் உதித் நாராயண் போன்றஆசாமிகளை தமிழ் பாட்டு பாட விடாமல் யாராவது தடுத்து நிறுத்தினால் ரொம்ப புண்ணியமாய் போகும்.

      Read more about: heroines opt for own voice
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X