ஓவர் பனி, ஓயாத குளிர்... மாஸ்கோ சாலைகளில் ஓடிய அருண் விஜய், விஜய் ஆண்டனி!

By

மூடர் கூடம் படத்துக்குப் பிறகு அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார் நவீன். அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம், படத்தில். ரஷ்யா பனிப்பொழிவில் ஷூட்டிங்கை முடித்துவிட்டுத் திரும்பி இருக்கிறது படக்குழு. அடுத்த கஜகஸ்தான் செல்ல இருக்கிறது.

'கதை அப்படித்தான். கொல்கத்தாவுல ஆரம்பிச்சு, ஐரோப்பிய நாடுகளுக்குப் போயி, நார்வேல முடியற மாதிரி இருக்கும். அதுக்காகத்தான் இந்தப் பயணம். கொஞ்சம் பெரிய பட்ஜெட்தான். தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுக்குத்தான் நன்றி சொல்லணும்'
என்கிறார் இயக்குனர் நவீன்.

 Agni siragugal director talks about his heros Arun Vijay and Vijay antony

பொதுவா பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடறதுதான் வழக்கம். நீங்க ஒவ்வொரு கேரக்டரையும், பெயர்களோட ரிலீஸ் பண்ணியிருக்கீங்களே..?

கதைக்கும் கேரக்டர் பெயர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கு. அதனாலதான் அப்படி. அருண் விஜய், ரஞ்சித்-ங்கற கேரக்டர்ல வர்றார். விஜய் ஆண்டனி பெயர் சீனு. அக்‌ஷரா ஹாசன், விஜி. இவங்கதான் மெயின் கேரக்டர்கள். இவங்களைச் சுற்றிதான் கதை நடக்குது. கதைக்கும் கேரக்டர் பெயர்களுக்கும் என்ன தொடர்புங்கறதை கொஞ்சம் வெயிட் பண்ணித் தெரிஞ்சுக்கோங்க.

போஸ்டர்ல வழக்கமான விஜய் ஆண்டனி தெரியலையே...

இதுவரை பார்த்த அவரை கொஞ்சம் மாத்தியிருக்கோம். ஹேர்ஸ்டைல், உடல் மொழி எல்லாமே மாறியிருக்கும். என் கேரக்டர் ஸ்டில்லை, என் வீட்டுல காட்டினா கூட, நான்தான்னு நம்ப மாட்டாங்கன்னு சொன்னார் விஜய் ஆண்டனி. இதுல கடுமையாக உழைச்சிருக்கார். ஒரு நாள் கூட, எப்படி நடிச்சிருக்கேன்னு மானிடர் பார்த்ததில்லை அவர்.

 Agni siragugal director talks about his heros Arun Vijay and Vijay antony

இரண்டு ஹீரோக்கள் இருக்காங்களே...

இதுல யாருக்கு முக்கியத்துவம்னு கேட்பீங்க... இந்தப் படத்தை பொறுத்தவரை எல்லாருக்குமே முக்கியத்துவம் இருக்கு. கதைதான் முக்கியமா இருக்கும். கதைப்படி ரெண்டு பேரும் வன்முறை ஆட்கள். ஆனா, ரெண்டு பேருக்குமான நோக்கங்கள் வேறு வேறா இருக்கும். இயல்பா நடிச்சிருக்காங்க. ஷூட்டிங்லயும் சரி, வெளியிலயும் சரி, ரெண்டு பேரும் நட்பா, ஜாலியா, எந்த ஈகோவும் இல்லாம இருந்தது பெரிய விஷயம். சினிமாவுல அருண் விஜய் சீனியர் ஹீரோ. அது எதையும் காண்பிக்காம, சின்ன கேரக்டர்ல நடிக்கிறவங்கள்ல இருந்து எல்லார்ட்டயும் ஒரே மாதிரி பழகுவார். அதே போலதான் விஜய் விஜய் ஆண்டனி யும்.

படத்துல காதல் இல்லையாமே...

இந்த கதைக்கு காதல் தேவையில்ல. அக்‌ஷரா ஹாசன், யாரையும் காதலிக்கிறவங்களா வரலை. இது ஒரு எமோஷனல் ஆக்‌ஷன் த்ரில்லர் படம். அவங்களுக்கும் விஜய் ஆண்டனிக்குமான காட்சிகள் உலுக்கி எடுக்கும்.

இதுல எப்படி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே வந்தார்...

அந்த கேரக்டர்ல முதல்ல பஞ்சு சுப்பு நடிச்சிருந்தார். அவரை வச்சு ஷூட் பண்ணிட்டோம். ரஷ்யா கிளம்பற நேரத்துல, வேற படத்துக்காகத் தாடி மீசையை எல்லாம் எடுத்துட்டார் சுப்பு சார். என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கும்போது, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, என் கதைக்குத் தேவையான சால்ட் அண்ட் பெப்பர் லுக்குல இருந்தார். அவரை அப்படியே அழைச்சுட்டு போயிட்டோம். அவர் பெயரையே சுப்புன்னு, ஜேஎஸ்கே கேரக்டர் பெயருக்கு வச்சுட்டோம். சுப்பு பஞ்சு சாரை வச்சு ஷூட் பண்ணினதையும் படத்துல சேர்த்திருக்கோம்.

 Agni siragugal director talks about his heros Arun Vijay and Vijay antony

இந்தப் படத்துக்கு ரஷ்யா ஏன்?

படத்துல பார்த்தீங்கன்னா, அதுக்கு காரணம் புரியும். நான் இயக்கி இருக்கிற அலாவுதீனின் அற்புத கேமரா படத்தை ஏழு நாடுகள்ல ஷூட் பண்ணியிருக்கேன். இந்தக் கதைக்கு ரஷ்ய பனிபொழிவு காட்சிகள் தேவைப்பட்டது. மாஸ்கோவுல இருக்கிற செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
நகரத்தை புத்தகங்கள்லதான் படிச்சிருக்கோம். நூற்றாண்டை கடந்தும் அந்தக் கட்டிடங்கள், பழமை மாறாம அப்படியே இருக்கு. அது வியப்பாத்தான் இருக்கு. இதே போல பல பழமையானக் கட்டிடங்களும் கதைக்குத் தேவைப்பட்டது. பனிப்பொழிவுக்காக காத்திருந்து
நவம்பர் மாதம் போனோம். கடுமையான குளிர். அதுல இரண்டு ஹீரோக்களும் மாஸ்கோ சாலைகள்ல ஓடியிருக்காங்க. பைட் பண்ணியிருக்காங்க.

இந்தி நடிகை ரைமா சென் போட்டோ, கிளாமரா இருக்கே...

கதைப்படி ஸ்மிதாங்கற கேரக்டர்ல நடிக்கிறாங்க. செக்ஸியாக கேரக்டர்தான். கொல்கத்தாவுல ஷூட்டிங் நடத்தப்போ, அவங்க நிறைய உதவி பண்ணினாங்க. அடுத்து படத்தோட ஷூட்டிங் கஜகஸ்தான்ல நடக்குது. இந்த மாச கடைசியில அங்க போறோம். இது ஸ்டைலிஷான படமா இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X