வேகமெடுக்கும் அக்னி சிறகுகள்-வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் போட்டோ
Recommended Video
சென்னை: நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அக்னி சிறகுகள் திரைப்படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடக்கத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான கஜகஸ்தானில் தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜார்னர் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆன்டனியும், என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக உருவாகி பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கும் அருண் விஜய்யும் இணையும் படம் தான் அக்னி சிறகுகள்.

இதை மாற்று சினிமா என்று சொல்லப்படும் படங்களுக்கு வித்திட்ட மூடர் கூடம் பட இயக்குநரான நவீன் இயக்குகிறார். இவரது கடைசி படம் வெளியாகி 6 வருடம் ஆகிறது. கடைசியாக மூடர் கூடம் படம் என்றாலும், அதற்கு பின் விசாகனை வைத்து இவர் இயக்க இருந்த படமானது தயாரிப்பின் போது பாதியில் நிறுத்த பட அதற்கு பின் அலாவுதீன் அற்புத கேமரா படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.
அந்த படமும் சில காரணங்களுக்காக ரிலீஸ் தள்ளி போய் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அக்னி சிறகுகள் படத்தை கிடப்பில் விட்டு விட கூடாது என இப்படத்தின் வேலைகளை துவங்கிய நவீன், தற்போது படப்பிடிப்பிற்காக படக்குழுவுடன் ஐரோப்பா சென்றிருக்கிறார்.
சுமார் 50 நாட்களுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, கஜகஸ்தான் போன்ற நகரங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அனல் பறக்கும் சண்டை காட்சிகளும் படமாக்க உள்ளதால் படக்குழு தீவிரமாக தயாராகி ஐரோப்பா சென்றுள்ளது.
இப்படத்தை டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு கப்பல், மூடர்கூடம், கொளஞ்சி, அலாவுதீனின் அற்புத கேமரா போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஆன்டனி, அருண் விஜய் உட்பட பிரகாஷ் ராஜ், ஷாலினி பான்டேவும் இணைந்து நடிக்க உள்ளனர்.
தற்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அருண் விஜய், இயக்குனர் நவீன் மற்றும் அனைத்து படக்குழுவும் ஒன்றாய் தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். இப்போது படக்குழு அல்மாட்டி எனும் ஊரில் இருக்கிறது என்றும் ,அது கஜகஸ்தானில் உள்ள ஊர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











