கஜகஸ்தான்ல நியூ இயர்... அப்படியே சுவிஸ், ஜெர்மனி... 'அக்னிச் சிறகுகள்' டீம் பிளான்
சென்னை: 'அக்னிச்சிறகுகள்' படக்குழு, அடுத்து கஜகஸ்தான், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளது.
மூடர் கூடம் படத்துக்குப் பிறகு அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார் நவீன். அருண்
விஜய், விஜய் ஆண்டனி ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
அக்ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஷ்யாவில் ஷூட்டிங்
ரஷ்ய நாட்டில் கடுமையான பனிப்பொழிவில் இதன் ஷூட்டிங்கை முடித்துவிட்டுத் திரும்பி இருக்கிறது படக்குழு. இங்கு அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா, ஜேஎஸ்கே, சென்ராயன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

அல்மாட்டி நகரில்
அடுத்து கஜகஸ்தான் செல்ல இருக்கிறது படக்குழு. அங்குள்ள அல்மாட்டி நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை வரும் 31 ஆம் தேதி இரவு படமாக்க உள்ளனர். இதற்காக படக்குழு இன்னும் சில நாட்களில் அங்கு செல்ல இருக்கிறது.

சுவிஸ்...ஜெர்மனி...
அங்கு முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்திலும் ஜெர்மனியில் சில காட்சிகளைப் படமாக்க உள்ளனர். இது வெளிநாடுகளில் நடக்கும் கதை. படத்தைப் பார்த்தால், ஏன் இத்தனை நாடுகளில் படமாக்குகிறோம் என்பது புரியும். தமிழுக்கு இந்தப் படம் புதியதாக இருக்கும் என்றார் இயக்குனர் நவீன்.

ஷாலினி பாண்டே
இந்தப் படத்தில் ஹீரோயினாக ஷாலினி பாண்டே நடித்தார். அவர் நடிக்கும் காட்சிகள் படமான நிலையில், அவரை நீக்கிவிட்டு, அக்ஷரா ஹாசனை படக்குழு ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











