»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒருவழியாய் முடிந்துவிட்டது ஆஹா எத்தனை அழகு படப்பிடிப்பு.

இதில் ஹூரோயின்களாக நடித்த ஷார்மிக்கும் டை ரக்டர் கண்மணிக்கும் காதல் ஏற்பட்டுவிட்டது. அதே போல இன்னொரு ஹூரோயின் பாவ்னா தயாரிப்பாளர் பங்கஜ் மேத்தாவின் மனதை அள்ளிவிட்டார்.

இதனால் ஆளுக்கு ஒரு ஹூரோயினை கையில் வைத்துக் கொண்டு டைரக்டரும் தயாரிப்பாளரும் சூட்டிங் ஸ்பாட்டில் மகிழ்ச்சியுடன் வலம் வந்தனர்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து அடிக்கடி சந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட கண்மணியும் ஷார்மியும் தங்கள் காதலை போனில் தொடர்ந்து கொண்டுள்ளதாகத் தகவல்.

ஆனால், எல்லா நடிகைகளையும் போலவே காதலை மறுக்கிறார் ஷார்மி. படம் நன்றாக ஓடி கண்மணிக்கு நிறைய சான்ஸ் வந்து பணமும் குவிந்தால் காதலை ஓப்பனாக வெளியே சொல்வார் ஷார்மி.

படம் ஊத்தி கண்மணி வீட்டில் சும்மா உட்காரும் நிலை வந்தாலும் காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்று சொல்லிவிட்டு தனது சினிமா வாழ்வைத் தொடருவார் என்கிறார்கள் ஷார்மியை நன்றாக அறிந்த சிலர்.

அதே நேரத்தில் பங்கஜ் மேத்தாவின் அன்பை வென்ற பாவ்னா இப்போது தனது சொந்த ஊரான பெங்களூர் சென்றுள்ளார். ஆனாலும் நீங்க எப்ப கூப்பிட்டாலும் (படத்தில் நடிக்கத் தான் !!) நான் வர ரெடி என்று பங்கஜ் மேத்தாவிடம் கூறிவிட்டுப் போயிருக்கிறாராம்.

படப்பிடிப்பில் வந்து பாவ்னாவுடன் சும்மா கடலை போட்டுக் கொண்டிருந்த மேத்தா, நீ எண்ணெய்ல குளிச்சா பளபளன்னு மாறிடுவ என்று சும்மா பேச்சுக்கு சொல்ல, அதற்கு பாவ்னா அப்படியா என்று வாய் பிளக்க உடனே ஒரு எண்ணெய் குளியல் பாடல் காட்சியை படத்தில் சேர்க்க வைத்தவராயிற்றே மேத்தா.

அதற்காக 500 லிட்டர் நல்லெண்ணெயை ஆர்டர் செய்து தொட்டியில் ஊற்றி அதில் பாவ்னாவை வெறும் டூ பீசில் மூழ்க வைத்து ரசியோ ரசி என்று ரசித்தாராம் மேத்தா.

அந்த பாடல் காட்சியை முழுமையாகப் படமாக்கும் வரை கூடவே இருந்து பாவ்னாவுக்கு ரொம்பவே உதவியாக இருந்தார் மேத்தா.

பாவ்னாவுக்கு காட்சிகளைக் கூட டைரக்டர் கண்மணி விளக்க அனுமதிக்காத தயாரிப்பாளர், அவரே விளக்கினாராம்.

இருவரும் ரொம்பவே நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

ரதியும் காதலில்...

இதற்கிடையே, நடிகை ரதி காதல் வலையில் விழுந்திருப்பதாகத் தெரிகிறது.

சொன்னபடி படப்பிடிப்புக்கு வருவதில்லை, சூட்டிங் ஸ்பாட்டில் வந்து டைரக்டருடன் தகராறு செய்வது என ரதி மீதுஎப்போதுமே ஏதாவதும் குற்றம் குறை சொல்லப்படுவது வழக்கம்.

ஆனால், இப்போது அவருக்கும் இளம் கதாநாயகன் ஒருவருக்கும் லவ்வு என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil