சிவாஜியுடன் நடிக்க ஐஸ் ஓ.கே? சிவாஜியில் ரஜினியின் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒரு வழியாக ஓ.கே. சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. 30 நாட்கள்வரை கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், ஓ.கே. என்றால் சொல்லி அனுப்புமாறும் ஐஸ் தரப்பில் ஷங்கருக்கு தகவல்போயுள்ளதாம். ஏவி.எம். தயாரிப்பில், ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் சிவாஜி படத்தில், ஐஸ்வர்யா தான் நடித்தே ஆக வேண்டும்என்று ரஜினி ஒற்றைக் காலில் நின்றார். இதையடுத்து ஷங்கர், ஐஸை அணுகவே, ஸாரி ஸார், கால்ஷீட் இல்லையே என்றுகூறியுள்ளார் ஐஸ். இருந்தாலும் விடாத ரஜினி, தொடர்ந்து ஷங்கரை அணத்திக் கொண்டே இருந்தார். தான் ஏன் ஐஸை தொடர்ந்துவலியுறுத்துகிறேன் என்பதை சந்திரமுகி பட விழாவின் போது விலாவாரியாக விளக்கினார். ரஜினி ஐஸ் மீது தொடர்ந்து தீவிரமாக இருந்ததால், ஷங்கரும் விடாமல் ஐஸை போட்டுத் தொரட்டிக் கொண்டிருந்தார். ஜீன்ஸில்நடித்த போதே, ஷங்கரின் டைரக்ஷன் பிடித்துப் போன ஐஸ், நிச்சயம் உங்களது அடுத்த ஒரு படத்திலும் நடிப்பேன் என பிராமிஸ்செய்திருந்தார். அதை சமயம் பார்த்து ஐஸின் மெமரியில் ஏற்றியுள்ளார் ஷங்கர். அவரது தடாலடியால், உணர்ச்சி வசப்பட்டுப் போன ஐஸ், சரிசார், சிவாஜியில் நடிக்க நான் தயார், 30 நாட்கள் வரை கால்ஷீட் கொடுக்க முடியும். அதற்குள் முடித்து விட்டு அனுப்பிவிடுவீர்களா என்று ஷங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளாராம் ஐஸ். இதனால் ரஜினி சந்தோஷமாகியுள்ளாராம். 30 நாட்களுக்குள் ஐஸ் சம்பந்தப்பட்ட போர்ஷனை முடித்து விடலாமா என்றுஷங்கரிடம் கேட்டுள்ளார். முடித்து விடலாம் என ஷங்கரும் நீண்ட யோசனைக்குப் பின்னர் (வழக்கமாக சில மாதங்கள் வரைஷூட் செய்வது ஷங்கரின் வழக்கம்!

By Staff
சிவாஜியில் ரஜினியின் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒரு வழியாக ஓ.கே. சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. 30 நாட்கள்வரை கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், ஓ.கே. என்றால் சொல்லி அனுப்புமாறும் ஐஸ் தரப்பில் ஷங்கருக்கு தகவல்போயுள்ளதாம்.

ஏவி.எம். தயாரிப்பில், ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் சிவாஜி படத்தில், ஐஸ்வர்யா தான் நடித்தே ஆக வேண்டும்என்று ரஜினி ஒற்றைக் காலில் நின்றார். இதையடுத்து ஷங்கர், ஐஸை அணுகவே, ஸாரி ஸார், கால்ஷீட் இல்லையே என்றுகூறியுள்ளார் ஐஸ்.

இருந்தாலும் விடாத ரஜினி, தொடர்ந்து ஷங்கரை அணத்திக் கொண்டே இருந்தார். தான் ஏன் ஐஸை தொடர்ந்துவலியுறுத்துகிறேன் என்பதை சந்திரமுகி பட விழாவின் போது விலாவாரியாக விளக்கினார்.

ரஜினி ஐஸ் மீது தொடர்ந்து தீவிரமாக இருந்ததால், ஷங்கரும் விடாமல் ஐஸை போட்டுத் தொரட்டிக் கொண்டிருந்தார். ஜீன்ஸில்நடித்த போதே, ஷங்கரின் டைரக்ஷன் பிடித்துப் போன ஐஸ், நிச்சயம் உங்களது அடுத்த ஒரு படத்திலும் நடிப்பேன் என பிராமிஸ்செய்திருந்தார்.

அதை சமயம் பார்த்து ஐஸின் மெமரியில் ஏற்றியுள்ளார் ஷங்கர். அவரது தடாலடியால், உணர்ச்சி வசப்பட்டுப் போன ஐஸ், சரிசார், சிவாஜியில் நடிக்க நான் தயார், 30 நாட்கள் வரை கால்ஷீட் கொடுக்க முடியும். அதற்குள் முடித்து விட்டு அனுப்பிவிடுவீர்களா என்று ஷங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளாராம் ஐஸ்.

இதனால் ரஜினி சந்தோஷமாகியுள்ளாராம். 30 நாட்களுக்குள் ஐஸ் சம்பந்தப்பட்ட போர்ஷனை முடித்து விடலாமா என்றுஷங்கரிடம் கேட்டுள்ளார். முடித்து விடலாம் என ஷங்கரும் நீண்ட யோசனைக்குப் பின்னர் (வழக்கமாக சில மாதங்கள் வரைஷூட் செய்வது ஷங்கரின் வழக்கம்!) ரஜினியிடம் கூறியுள்ளார்.

அப்புறம் என்ன, சட்டுப்புட்டென்று பார்மாலிட்டிகளை முடித்து விடுங்கள் என்று ஷங்கரை உசுப்பேத்தி விட்டுள்ளாராம் ரஜினி.

ஐஸ், ஓ.கே. சொல்லியுள்ளதால், விரைவில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளக் கூடும் எனத் தெரிகிறது. அப்ப ஷ்ரேயா? ஐஸ்வந்தால் ஷ்ரேயா இரண்டாவது நாயகியாகி விடுவார். சந்திரமுகியில் நயன்தாராவைப் போல அழகுப் பொம்மையாக வந்துசெல்ல வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

ஷ்ரேயா பத்தி இன்னொரு மேட்டர். சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கிய சிவாஜி படப்பிடிப்பில் ஒரு பாடலை சுட்டுள்ளார்கள்.ரஜினியும், ஷ்ரேயாவும் சேர்ந்து ஆடும் பாட்டு இது. படு அசத்தலாக வந்துள்ள அந்தப் பாட்டுக்கு ரஜினி மிக எளிதாகமூவ்மென்ட்களைப் போட்டு கலக்கியுள்ளாராம். ஆனால் ஷ்ரேயா தான் ரஜினிக்கு ஈடு கொடுத்து ஆட முடியாமல் பல டேக்வாங்கினாராம்.

சின்னப் பசங்களுடன் இஷ்டத்திற்கு ஆடி விட்டு, முதன் முதலாக ஒரு சூப்பர் ஸ்டாருடன் ஆடுவதால் பயந்து கொண்டேஆடினாராம். இதனால் நெர்வஸ் ஆகி ஸ்டெப்ஸ்கள் தடுமாறியதாம். அவரை ஆசுவாசப்படுத்திய ரஜினி, ஜாலியாக ஆடவேண்டும் என்று எடுத்துக் கூறி, அப்புறமாய் ஆட விட்டு சுட்டார்களாம்.

வைரமுத்துவின் வரிகளில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை 8 நாட்களில் எடுத்துமுடித்துள்ளார்கள்.

அடங்கொப்புரானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X