»   »  ஆழ்வார் அஜீத்!

ஆழ்வார் அஜீத்!

Subscribe to Oneindia Tamil

ஆழ்வார் படம் அஜீத்துக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

வரலாறு மூலம் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அஜீத் அடுத்து நடித்து வரும் ஆழ்வார் படம் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை இயக்குபவர் எஸ்.ஜே.சூர்யாவின் அசோசியேட் ஷெல்லா.

ஆழ்வார் குறித்துக் கேட்டால் படு ஆர்வமாக பேசுகிறார் ஷெல்லா. மருத்துவமனையில் வார்டு பாயாக வேலைபார்க்கிறார் அஜீத். அவரது பெயர்தான் ஆழ்வார்.

பகலில் பத்தி>கைகளில் வரும் அக்கிரமச் செய்திகளைப் படித்து விட்டு இரவில் மாறு வேடங்களில்அக்கிரமக்காரர்களை வேட்டையாடுகிறார் அஜீத். இந்தக் காட்சிகளில் அஜீத் நடிப்பில் பின்னி எடுத்துள்ளார்.

அஜீத்துக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ஆசின், இன்னொருவர் கீர்த்தி சாவ்லா. இருவருக்கும் நடிக்க நல்லவாய்ப்பு, கிளாமருக்கு அபார வாய்ப்பு. இருவரும் பின்னி எடுத்திருக்கிறார்கள் என்கிறார்.

இப்படத்தில் மலையாள நடிகர் லால், வின்சென்ட் அசோகன், ஆர்யன் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர்.விவேக் படு காமெடியான ரோலில் பின்னி எடுத்துள்ளார். பிணவறைக் காப்பாளராக வருகிறாராம் விவேக்.அஜீத்துடன் நீண்ட நாளுக்குப் பிறகு இணைந்துள்ளதால் படு கலக்கலாக நடித்திருக்கிறாராம்.

இந்தப் படத்தில் இன்னொரு விசேஷமும் இருக்கிறதாம்ய அதாவது பக்கம் பக்கமாக வசனம் பேசி வந்தஅஜீத்தை இந்தப் படத்தில் படு குறைச்சலாக வசனம் பேச வைத்துள்ளாராம். அதாவது படம் முழுக்கவே,மொத்தமே 10 பக்க வசனத்தைத்தான் அஜீத் பேசியுள்ளாராம்.

ஆழ்வாரின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எண்ணூ>ல் உள்ள ஒரு உர நிறுவனத்தில் படமாக்கினார்களாம். 30லாரிகளுக்கு மத்தியில் இந்தக் காட்சியை படமாக்கியுள்ளனர். அது அஜீத்தை வில்லனின் ஆட்கள் தீயில்கொளுத்துவது போல காட்சியாகும். இந்தக் காட்சியில் டூப் போடாமல் அஜீத்தே துணிச்சலாக நடித்தாராம்.

இதேபோல காரைக்குடியில், அட்டகாசமான ஒரு சகதிச் சண்டையை படமாக்கியுள்ளனர். அதிகாலை 2 மணிக்குஅந்த ஷூட்டிங் நடந்ததாம். இதிலும் அஜீத் ஈடுபாட்டோடு நடித்தாராம்.

இந்தக் காட்சியை படமாக்கிய பின்னர் ஷெல்லாவின் கையைப் பிடித்துக் குலுக்கிய அஜீத், மறுபடியும் உங்கடைரக்ஷனில் நடிக்க ஆசைப்படுகிறேன் பாஸ் என்று நெகிழ்ந்து போய்க் கூறினாராம்.

மறுபடியும் தல தலையெடுததால் சரி...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil