»   »  முதுகு வலி-ஷூட்டிங்கில் கதறிய அஜீத்

முதுகு வலி-ஷூட்டிங்கில் கதறிய அஜீத்

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டனத்தில் கிரீடம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜீத்துக்கு கடும் முதுகவலி ஏற்பட்டதால் அவர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டுசென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

பைக் ரேஸ் பிரியரான அஜீத், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விபத்தில் சிக்கி முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெரும்போராட்டத்திற்குப் பின்னர் அவர் நலமடைந்தார்.

அதன் பின்னர் சினிமாவில் சேர்ந்த பிறகும் கூட கார் ரேஸ், பைக் ரேஸில் அவ்வப்போது கலந்து கொண்டார். இடையில் அவரது படங்கள் சரியாகஓடாதிருந்தபோது மீண்டும் தீவிரமாக கார் ரேஸில் பங்கேற்றார்.

சிறு வயதில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட பாதிப்பு அவருக்குத் தொடர்ந்து இருந்து வருகிறது. மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டு நடித்துவருகிறார். இதனால் அவரது உடல் பருமனாகிவிட்டது. இதைக் குறைக்க தீவிர உடற் பயிற்சிகளையும் செய்து வருகிறார்.

இருப்பினும் சண்டைக் காட்சிகளில் மட்டும் ரிஸ்க் எடுத்து நடிக்காமல் தவிர்த்து வருகிறார்.

இந்த நிலையில் கிரீடம் படப்பிடிப்புக்காக விசாகப்பட்டனத்தில் முகாமிட்டிருந்தார் அஜீத். எதிரிகளுடன் அஜீத் சண்டையிடுவது போன்ற காட்சியைபடமாக்கினர். அப்போது தானே நடிப்பதாக அஜீத் கூறவே, டூப் போடலாம் என சண்டைப் பயிற்சியாளர் கூறினார். ஆனால் அதை மறுத்து விட்டார்அஜீத்.

காரின் மேலிருந்து குதிப்பது போன்ற காட்சியாகும் அது. அதன்படி மேலிரிருந்து அவர் குதிக்க முயன்றபோது முதுகில் சுரீர் என்று வலிஏற்பட்டுள்ளது. இதனால் கீழே குதிக்க முடியாமல் கார் மீது அப்படியே படுத்து வலியால் துடித்தார் அஜீத்.

உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் விசாகபட்டினத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அஜீத்.

இந் நிலையில் நேற்று காலை நடித்துக் கொண்டிருந்தபோது மறுபடியும் முதுகு வலி ஏற்பட்டது. நிற்கவோ, உட்காரவோ முடியாமல் மிகவும்சிரமப்பட்டார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வலியால் கதறிய அஜீத்தை ஆம்புலன்ஸ் மூலம்விசாகப்பட்டனம் விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வந்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அஜீத்துக்கு மீண்டும் முதுகு வலி வந்ததால் படப்பிடிப்புமுழுமையாக ரத்து செய்யப்பட்டது. படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil