அஜீத் 57: 60 சதவீத படப்பிடிப்புதான் முடிஞ்சிருக்கு.. இன்னும் 55 நாள் ஷூட் பாக்கி இருக்கு!
அஜீத் நடிக்கும் 57 வது படத்தின் ஷூட்டிங் நிலைமை என்ன? ஓவர் பட்ஜெட்டாமே... தாங்குமா தயாரிப்பு நிறுவனம் என்றெல்லாம் செய்திகள் எக்குத் தப்பாக வந்து கொண்டிருக்கின்றன.
இதோ அஜீத் 57 பற்றி ஒரு க்விக் அப்டேட்...
படத்தின் 60 சதவீதப் படப்பிடிப்புதான் இதுவரை முடிந்திருக்கிறது. ஐரோப்பா மற்றும் ஹைதராபாத்தில் இந்தக் காட்சிகள் படமாகியுள்ளன.

மீதியுள்ள காட்சிகளை எடுத்து முடிக்க 55 நாட்கள் தேவை.. அதுவும் பல்கேரியாவில்தான் முழுப் படப்பிடிப்பும் என்று கூறியுள்ளாராம் இயக்குநர் சிவா. இதற்காக வெகு சீக்கிரமே பல்கேரியா செல்கிறது படக்குழு.
அஜீத் இந்தப் படத்தில் ஒரு இன்டர்போல் ஆபீசராக நடிக்கிறார். அவர் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல் மகள் அக்ஷரா ஹாஸன் முக்கிய வேடத்தில் வருகிறார். வில்லன் வேடத்தில் விவேக் ஓபராய்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
படம் அநேகமாக தமிழ்ப் புத்தாண்டுக்கு தயாராகிவிடும் என்கிறார்கள். பெரும் பணத்தை இந்தப் படத்தில் முதலீடு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன்.


Click it and Unblock the Notifications











