'வலிமை படப்பிடிப்பில் அஜித் காயம்... ரெஸ்ட் எடுக்க சொன்ன இயக்குனர்... நள்ளிரவு வரை நடித்த 'தல'!
Recommended Video
சென்னை: 'வலிமை' படப்பிடிப்பின்போது காயத்துடன் அஜித் நள்ளிரவு நடித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
அஜித்குமார் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.
இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹூமா குரேஸி
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இதில் இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்திருந்தார்.

பிரமாண்ட செட்
இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. பின்னர் படக்குழு சென்னைத் திரும்பியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டு படமானது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. பின்னர் இதையடுத்து நடிகர் பிரசன்னா நடிப்பதாகக் கூறப்பட்டது.

வில்லன் நடிகர்
இதை அவரும் எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில், தான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதற்கிடையே நடிகர் நவ்தீப் அதில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இவர் அஜித்துடன் ஏகன் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார். தமிழில் அறிந்தும் அறியாமலும், உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சீறு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

தாமதமானதாக
இந்நிலையில் நடிகர் அஜித் படப்பிடிப்பில் ஒழுங்காகக் கலந்துகொள்ளவில்லை என்றும் அவரால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் இதனால் படத்தின் இயக்குனர் வருத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இதை அஜித் தரப்பு மறுத்துள்ளது. எவ்வளவு அர்ப்பணிப்புடன் அஜித் நடித்தார் என்பதற்கு ஒரு சம்பவத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித் காயம்
அதாவது இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டது என்றும் அப்போது இயக்குனர் உட்பட பலர் ரெஸ்ட் எடுக்குமாறு கூறியும் அவர் மறுத்துவிட்டாராம். காயத்துடனேயே நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் கலந்துகொண்டு முடித்துக் கொடுத்தார் என்றும் இதைக் கண்டு படக்குழுவினர் வியந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications