»   »  வேதாளம் அப்டேட்: காலில் காயம் பட்டும் கவலைப்படாமல் நடித்த அஜீத்

வேதாளம் அப்டேட்: காலில் காயம் பட்டும் கவலைப்படாமல் நடித்த அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத் எந்த படத்தில் நடித்தாலும் காயம் என்று ஒரு செய்தியாவது வருவது வாடிக்கை. வேதாளம் படத்தின் டீசர், பாடல் காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரபரபப்பை கிளப்பி வரும் நிலையில் இறுதிநாள் படப்பிடிப்பின் போது அஜீத் காலில் காயம் ஏற்பட்டு விட்டதாம். ஆனாலும் கவலைப்படாமல் முழு படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்தாராம் அஜீத்.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் 'சிறுத்தை' சிவா. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

வேதாளம் படத்தில் கால்டாக்சி டிரைவராக நடிக்கிறாராம் அஜீத். சூரிதான் கால்டாக்சி நிறுவனத்தின் ஓனராம். இதனை யாரோ பத்தவைத்து விட சூரியின் வாய்க்கு பூட்டு போட்டு விட்டார்களாம். இது ஒரு புறம் இருக்க தங்கையின் ஆவி தலயில் உடம்பில் புகுந்து கொண்டு பழிவாங்கும் கதை என்றும் பரவி வந்தது. எப்படியே வேதாளம் படத்தில் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று பேசப்படுகிறது.

நடனக்காட்சியில் அஜீத்

நடனக்காட்சியில் அஜீத்

இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு அக்டோபர் 15ம் தேதி நடைபெற்றது. அஜித் நடனமாடும் சில காட்சிகளை படமாக்கினார்கள். அப்போது அவருக்கு காலில் அடிபட்டது.

வலியில் துடித்த அஜீத்

வலியில் துடித்த அஜீத்

'ஆரம்பம்' படத்தின் போது காலில் அடிபட்டு, ப்ளேட் வைக்கப்பட்டது. அதே இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால் வலியால் துடித்தார் அஜீத். படக்குழு உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்தது.

ஒரு மணி நேரம் ஓய்வு

ஒரு மணி நேரம் ஓய்வு

இறுதிநாள் படப்பிடிப்பு நிறுத்த வேண்டாம், ஒரு மணி நேரம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டு ஒய்வெடுத்திருக்கிறார். அதற்கு பிறகு, மீண்டும் கால் வலியோடு முழுப் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார் அஜீத்.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

'வேதாளம்' படத்தின் முதல் பாதி டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் அஜித். இரண்டாம் பாதி டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கியிருக்கிறது. படம் தீபாவளிக்கு திரைக்கு வரவருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ajith was injured during the last day shoot of Vedhalam. Vedhalam is slated for a grand Diwali release.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil