பட்ட காலிலேயே படுகிறதே: படப்பிடிப்பில் அஜித் காயம் #Ajith
Recommended Video

ஹைதராபாத்: விஸ்வாசம் படப்பிடிப்பில் அஜித் காயம் அடைந்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் அஜித் காலில் அடிபட்டுள்ளதாம்.
ஏற்கனவே காலில் ஆபரேஷன் செய்துள்ள நிலையில் அடிபட்டுள்ளது.

அஜித்
காலில் அடிபட்டதும் அஜித் வலியால் துடித்துள்ளார். இதை பார்த்த சிவா உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்திவிடலாம் என்று அஜித்திடம் தெரிவித்துள்ளனர்.

நடிப்பேன்
ஏற்கனவே படப்பிடிப்பு தாமதாக துவங்கியுள்ளது. எனக்காக நிறுத்த வேண்டாம். நான் வலியை பொறுத்துக் கொண்டு நடிக்கிறேன் என்று கறாராக கூறிவிட்டாராம் அஜித்.

என்ன மனுஷன்
வலியை தாங்கிக் கொண்டு அஜித் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளது படக்குழுவினரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் அஜித் ரசிகர்களோ கவலை அடைந்துள்ளனர்.

நடிப்பு
முன்னதாக விவேகம், வேதாளம் படங்களில் நடிக்கும் போதும் அஜித் காயம் அடைந்தார். வேதாளம் படத்தில் நடித்தபோது ஆபரேஷன் செய்த காலிலேயே அடிபட்டும் படப்பிடிப்பை நிறுத்தவிடாமல் டேப் ஒட்டிக் கொண்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவலை
இது என்ன அடிபட்ட காலிலேயே அடிபடுகிறதே. எவ்வளவு வலியை தான் அஜித் தாங்குவார் என்று தல ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். விவேகம் படத்தில் நடித்தபோது தோளில் காயம் ஏற்பட்டது, தற்போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











