அஜீத்தின் பெயரிடப்படாத பட ஷூட்டிங் முடிந்தது: செப்டம்பரில் ரிலீஸ்?
சென்னை: ஒரு ஆண்டுகாலமாக நடந்த அஜீத்தின் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிந்துவிட்டது.
அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துள்ள படத்தின் வேலைகள் ஓராண்டு காலமாக நடந்தது. இந்த படத்தின் வேலைகள் எப்பொழுது முடியும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் ஒரு வழியாக ஷூட்டிங் முடிந்துவிட்டது. அஜீத்தும் அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார்.

2 நாட்களுக்கு முன்பு முடிந்தது
அஜீத் படத்தின் ஷூட்டிங் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது என்று கூறப்படுகிறது. போஸ்ட் புரடக்ஷன் வேலைகளும் ஜரூராக நடந்துள்ளது.

எப்பப்பா பெயர் வைப்பீர்கள்?
படத்திற்கு எப்பொழுது தான் பெயர் வைப்பார்கள் என்று ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர்.

டிரெய்லர் எப்போ வரும்?
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு ஆகியவை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.

ஆகஸ்ட்டில் ரிலீஸ் இல்லையா?
படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் படம் செப்டம்பர் முதல் வாரத்தில் தான் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











