»   »  சூட்டிங்கில் தலையில் அடி: அஜீத் மயக்கம் சென்னை காட்ஃபாதர் படப்பிடிப்பின் போது நடிகர் அஜீத் கீழே விழுந்து தலையில் அடிபட்டது. இதனால் அஜீத் மயங்கி கீழேவிழுந்தார்.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் காட்ஃபாதர். இதில் அஜீத் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின்முக்கியக் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு விட்ட நிலையில், கிளைமாக்ஸ் மட்டும் படமாக்கப்படாமல் இருந்து வந்தது.தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் சென்னை ஈஞ்சம்பாக்கம் விஜிபி தங்கக் கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாகபடமாக்கப்பட்டு வருகின்றன. அஜீத் சம்பந்தப்பட்ட சில சண்டைக் காட்சிகளை இங்கு படம் பிடித்து வருகிறார்கள்.கதாநாயகன் அஜீத்தை, வில்லன் அஜீத் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியைப் படம் பிடித்தனர். இதற்காக அஜீத்தின்சட்டைக்குள் டம்மி குண்டு பொருத்தப்பட்டது. அவரை சுடும் டூப் அஜீத்தும், ஹீரோ அஜீத்தும் நடிப்பதற்குத் தயாராக இருந்தனர். ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆக்ஷன் என்றதும் டூப் அஜீத் துப்பாக்கியால் சுடுவது போல நீட்டினார். ஹீரோ அஜீத்தின்சட்டைக்குள் வைக்கப்பட்டிருந்த டம்மி குண்டு ரிமோட் மூலம் வெடிக்கப்பட்டது.அப்போது அஜீத் மேலே போய் கீழே விழுவது போல நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது தலையில் பலத்தஅடிபட்டது. இதனால் சுருண்டு போன அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.பின்னர் மயக்கம் தெளிந்து அஜீத் எழுந்தார். இந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புத் தளத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று அனைவரையும் தொடர்ந்து சமாதானப்படுத்திய அஜீத் தொடர்ந்து சில காட்சிகளில் நடித்துக்கொடுத்தார்.

சூட்டிங்கில் தலையில் அடி: அஜீத் மயக்கம் சென்னை காட்ஃபாதர் படப்பிடிப்பின் போது நடிகர் அஜீத் கீழே விழுந்து தலையில் அடிபட்டது. இதனால் அஜீத் மயங்கி கீழேவிழுந்தார்.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் காட்ஃபாதர். இதில் அஜீத் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின்முக்கியக் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு விட்ட நிலையில், கிளைமாக்ஸ் மட்டும் படமாக்கப்படாமல் இருந்து வந்தது.தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் சென்னை ஈஞ்சம்பாக்கம் விஜிபி தங்கக் கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாகபடமாக்கப்பட்டு வருகின்றன. அஜீத் சம்பந்தப்பட்ட சில சண்டைக் காட்சிகளை இங்கு படம் பிடித்து வருகிறார்கள்.கதாநாயகன் அஜீத்தை, வில்லன் அஜீத் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியைப் படம் பிடித்தனர். இதற்காக அஜீத்தின்சட்டைக்குள் டம்மி குண்டு பொருத்தப்பட்டது. அவரை சுடும் டூப் அஜீத்தும், ஹீரோ அஜீத்தும் நடிப்பதற்குத் தயாராக இருந்தனர். ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆக்ஷன் என்றதும் டூப் அஜீத் துப்பாக்கியால் சுடுவது போல நீட்டினார். ஹீரோ அஜீத்தின்சட்டைக்குள் வைக்கப்பட்டிருந்த டம்மி குண்டு ரிமோட் மூலம் வெடிக்கப்பட்டது.அப்போது அஜீத் மேலே போய் கீழே விழுவது போல நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது தலையில் பலத்தஅடிபட்டது. இதனால் சுருண்டு போன அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.பின்னர் மயக்கம் தெளிந்து அஜீத் எழுந்தார். இந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புத் தளத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று அனைவரையும் தொடர்ந்து சமாதானப்படுத்திய அஜீத் தொடர்ந்து சில காட்சிகளில் நடித்துக்கொடுத்தார்.

Subscribe to Oneindia Tamil
சென்னை காட்ஃபாதர் படப்பிடிப்பின் போது நடிகர் அஜீத் கீழே விழுந்து தலையில் அடிபட்டது. இதனால் அஜீத் மயங்கி கீழேவிழுந்தார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் காட்ஃபாதர். இதில் அஜீத் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின்முக்கியக் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு விட்ட நிலையில், கிளைமாக்ஸ் மட்டும் படமாக்கப்படாமல் இருந்து வந்தது.

தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் சென்னை ஈஞ்சம்பாக்கம் விஜிபி தங்கக் கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாகபடமாக்கப்பட்டு வருகின்றன. அஜீத் சம்பந்தப்பட்ட சில சண்டைக் காட்சிகளை இங்கு படம் பிடித்து வருகிறார்கள்.

கதாநாயகன் அஜீத்தை, வில்லன் அஜீத் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியைப் படம் பிடித்தனர். இதற்காக அஜீத்தின்சட்டைக்குள் டம்மி குண்டு பொருத்தப்பட்டது. அவரை சுடும் டூப் அஜீத்தும், ஹீரோ அஜீத்தும் நடிப்பதற்குத் தயாராக இருந்தனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆக்ஷன் என்றதும் டூப் அஜீத் துப்பாக்கியால் சுடுவது போல நீட்டினார். ஹீரோ அஜீத்தின்சட்டைக்குள் வைக்கப்பட்டிருந்த டம்மி குண்டு ரிமோட் மூலம் வெடிக்கப்பட்டது.

அப்போது அஜீத் மேலே போய் கீழே விழுவது போல நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது தலையில் பலத்தஅடிபட்டது. இதனால் சுருண்டு போன அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் மயக்கம் தெளிந்து அஜீத் எழுந்தார். இந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புத் தளத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று அனைவரையும் தொடர்ந்து சமாதானப்படுத்திய அஜீத் தொடர்ந்து சில காட்சிகளில் நடித்துக்கொடுத்தார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil