ஆக்ஷன் காட்சியில் திடீர் விபத்து... பிரபல வாரிசு ஹீரோ கையில் படுகாயம்...ஷூட்டிங் கேன்சல்!
சென்னை: பிரபல ஹீரோவின் மகன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் காயம் அடைந்தார்.
Recommended Video
வேலூரைச் சேர்ந்தவர், இயக்குனர் பாஸ்கர். தெலுங்கு படங்களை இயக்கி வருகிறார்.
இவர் இயக்கிய பொம்மரிலு படம்தான், தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் ஜெயம் ரவி, ஜெனிலியா நடித்திருந்தனர். இந்தப் படம் தமிழிலும் ஹிட்டானது.

பெங்களூர் நாட்கள்
இதையடுத்து பருகு, ஆரஞ்ச் உட்பட சில படங்களை தெலுங்கில் இயக்கிய இவர், தமிழில் பெங்களூர் டேஸ் படத்தை 'பெங்களூர் நாட்கள்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதில் ராணா, ஶ்ரீதிவ்யா, ஆர்யா, பாபி சிம்ஹா, ராய் லட்சுமி, பார்வதி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மலையாளத்தில் ஹிட் ஆன அளவு, தமிழில் வரவேற்பை பெறவில்லை.

பூஜா ஹெக்டே
இவர், இப்போது 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அகில் ஹீரோவாக நடிக்கிறார். இவர், பிரபல நடிகர் நாகார்ஜுனா, அமலா தம்பதியரின் மகன். அகில் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முரளி சர்மா, ஜெயபிரகாஷ், ஈஷா ரெப்பா உட்பட பலர் நடிக்கின்றனர். தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் அகிலுக்கு இந்தப் படம் திருப்பு முனையாக அமையும் என்று கூறப்படுகிறது.

முழங்கையில் காயம்
இதன் ஷூட்டிங் சென்னையில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. நேற்று நடந்த படப்பிடிப்பில், அகில் திடீரென விபத்தில் சிக்கினார். இதில் அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

படப்பிடிப்பு ரத்து
அவர் முழங்கை கடுமையாக வீங்கி இருப்பதாகவும் டாக்டர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதை அடுத்து அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் குணமான பின்பு ஷூட்டிங் தொடங்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications