twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடேங்கப்பா.. பாலிவுட்டில் ஷூட்டிங்கை ஆரம்பித்த அக்‌ஷய் குமார்.. எப்படி நடத்துறாங்க பாருங்க!

    |

    மும்பை: லாக்டவுன் நீக்கப்படாத நிலையில், நடிகர் அக்‌ஷய் குமாரின் ஷூட்டிங் நடைபெற்று இருப்பது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் லாக்டவுன் போடப்பட்டது.

    அதன் காரணமாக கிட்டத்தட்ட 2 மாதங்கள் எந்தவொரு படத்தின் ஷூட்டிங்கும் நடைபெறவில்லை.

    ஆபாச காட்சிகளுக்கு அளவே இல்லை.. மத பிரச்சனை கிளப்பும் வெப்சீரிஸ்கள். டிரெண்டாகும் #CensorWebSeriesஆபாச காட்சிகளுக்கு அளவே இல்லை.. மத பிரச்சனை கிளப்பும் வெப்சீரிஸ்கள். டிரெண்டாகும் #CensorWebSeries

    பாலிவுட் நடிகர்கள்

    பாலிவுட் நடிகர்கள்

    கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பாலிவுட் நடிகர்கள் ஆற்றிய பங்கு அபாரமானது. ஷாருக்கான் தனது அலுவலகத்தையே மருத்துவமனையாக மாற்றினார். சல்மான் கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் பணம் போட்டார். கோதுமை பைகளில் அமீர்கான் காசு போட்டதாக தகவல்கள் பரவின.

    30 கோடி

    30 கோடி

    எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதமர் மோடி அறிவித்த உடனே 25 கோடி நிதியை அளிக்க முன்வந்து நாட்டு மக்களை ஆச்சர்யப்படுத்தினார். மேலும், மும்பை மாநகராட்சிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் சுமார் 5 கோடி அளவில் நிதியுதவி வழங்கி உள்ளார். அக்‌ஷய் குமாரின் தாராள மனசை பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பாரட்டினர்.

    ஷூட்டிங் அனுமதி

    ஷூட்டிங் அனுமதி

    லாக்டவுன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் எந்தவொரு ஷூட்டிங்கும் நடைபெறவில்லை. சமீபத்தில், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அக்‌ஷய் குமார் ஷூட்டிங்

    அக்‌ஷய் குமார் ஷூட்டிங்

    இந்நிலையில், இயக்குநர் ஆர். பால்கி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் பட ஷூட்டிங் ஒன்று கமலிஸ்தான் ஸ்டூடியோவில் பல கட்ட பாதுகாப்புகளுடன் நடைபெறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அது எப்படி அக்‌ஷய் குமார் படத்துக்கு மட்டும் அனுமதி கிடைச்சது என சிலர் புலம்பியும் தள்ளினர்.

    அரசு விளம்பரம்

    அரசு விளம்பரம்

    இந்நிலையில், லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு, பொதுமக்கள் என்ன என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளையும், ஆரோக்கிய விஷயத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்கிற அரசு விளம்பரத்திற்காகவே இந்த அனுமதி கிடைத்திருக்கிறது. மாஸ்க் அணிந்தபடி, சின்ன யூனிட்டுடன் அனைத்து வித பாதுகாப்புகளையும் பின்பற்றி இந்த ஷூட்டிங் நடந்திருக்கிறது.

    Recommended Video

    Serial Shooting Resumes • Khushboo Sundar & Sujatha Vijaykumar Zoom Call
    இனிமேல் இப்படித்தான்

    இனிமேல் இப்படித்தான்

    மேலும், இதே போன்று தான் இனிமேல் ஷூட்டிங் நடைபெறும் என்றும், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என வெகு சிலரே ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டும். பொதுமக்கள் வேடிக்கை பார்க்க அனுமதி கிடையாது. உள்ளிட்ட பல விதிமுறைகளை பின்பற்றியே அனைத்து இடங்களிலும் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என இயக்குநர் பால்கி PTIக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Akshay Kumar and director R Balki on Monday shot for an advertisement campaign regarding the "post lockdown responsibilities" at Kamalistan studio while taking necessary precautions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X