அஜித் மாதிரியே சொல்பேச்சு கேட்காமல் காயம் அடைந்த அமலா பால்
Recommended Video

சென்னை: அதோ அந்த பறவை போல படப்பிடிப்பில் அமலா பால் காயம் அடைந்துள்ளார்.
புதுமுக இயக்குனர் வினோத் இயக்கி வரும் படம் அதோ அந்த பறவை போல. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் அமலா பால் நடித்து வருகிறார்.
நயன்தாரா போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து வருகிறார் அமலா பால்.

காயம்
படத்தில் அமலாவுக்கு பல ஸ்டண்ட் காட்சிகள் உள்ளன. அப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது அமலா பாலின் கையில் அடிபட்டது. முதலில் சுளுக்கு என்று நினைத்து வலி இருந்த இடத்தில் ஐஸ் வைத்துவிட்டு படப்பிடிப்பை தொடர்ந்தனர். பரவாயில்லை நான் நடிக்கிறேன் என்று அமலா கூறியதால் படப்பிடிப்பு தொடரப்பட்டது. ஆனால் படப்பிடிப்பை துவங்கிய வேகத்தில் அமலா பாலுக்கு கையில் வலி அதிகமானது. இதையடுத்து ஸ்டண்ட் காட்சியை படமாக்குவது கைவிடப்பட்டது.

அமலா
வலி அதிகம் இருந்தபோதிலும் தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்பட வேண்டாம் என்று அமலா பால் தெரவித்தார். கையை பயன்படுத்தாத காட்சிகளில் நடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பினார். கொச்சியில் அவர் சிகிச்சை பெற கிளம்பினார். அதன் பிறகே அவருக்கு தசைநாரில் காயம்(ligament tear) என்று தெரிய வந்தது.

மருத்துவர்கள்
நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை செய்துள்ளனர். ஆனால் அமலாவோ நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட மாட்டேன் என்று அடம்பிடித்து அவரே நடித்து வருகிறாராம். ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க சிறப்பு பயிற்சி வேறு பெற்றுள்ளாராம் அமலா. அடிபட்டாலும் சரி மீண்டும் வந்து நானே தான் ஸ்டண்ட் செய்வேன் என்று அடம்பிடிக்கிறாராம் அமலா பால்.

விஜய்
படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது, 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி இருந்த நிலையில் அமலாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட மாட்டேன் என்று அடம்பிடித்து நடித்து காயம் அடைவார் அஜித். தற்போது அமலா அஜித் மாதிரியே அடம்பிடித்து நடித்து காயம் அடைந்துள்ளார். அஜித் மட்டும் அல்ல விஜய்யும் டூப் போட மறுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











