Don't Miss!
- News மோடி தான் மீண்டும் பிரதமர்.. குஷ்புக்கு பதிலாக பிராசாரத்தில் இறங்கிய நடிகர் சுந்தர் சி
- Lifestyle கிரேக்க, எகிப்து மற்றும் ரோமன் வடிவ பாதங்களில் உங்க பாதம் எந்த வகைனு சொல்லுங்க? உங்களை பற்றி நாங்க சொல்றோம்...
- Automobiles குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
- Technology விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கேக்கு புதிய சிக்கல்.. மே மாதம் முழுவதும் விலகும் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்.. பெரும் பின்னடைவு!
- Finance ஈஸியா ரூ.5 லட்சம் உங்களை தேடி வரும்.. மத்திய அரசின் சூப்பரா திட்டம்.. அதுவும் அந்த சலுகை செம!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
அமிதாப்பச்சனுக்கு திடீர் காய்ச்சல்: படப்பிடிப்பு ரத்து
மும்பை: பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீபிகா படுகோனே, இர்பான் கான் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் 'பிகு' என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமிதாப் பச்சன் கலந்துகொண்டார்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்த அமிதாப் பச்சனுக்கு, திடீரென்று வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் உடல் நலம் சோர்வாக காணப்பட்டார். உடனே படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழுவினர், உடனடியாக அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர்.
இந்நிலையில், தனது உடல்நலம் குறித்து 'டுவிட்டர்' வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமிதாப்பச்சன், 'அட, காய்ச்சல் ஏற்பட்டு சரிந்துவிட்டேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தான் மீண்டுவர வேண்டும் என்று தனக்காக பிரார்த்தனை செய்யும் அனைத்து ரசிகர்களுக்கும் அவர் நன்றியையும் தெரிவித்து கொண்டுள்ளார்.