சூட்டிங் ஸ்பாட்
அன்பாலயா பிரபாகரன் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஒரு பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறார். இதில்அர்ஜூன் ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கு "அசோகா" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது 2 கதாநாயகிகள் சப்ஜெக்ட்டாம். அதற்காக கதாநாயகிகள் வலைவீசி தேடப்பட்டு வருகிறார்கள். ரகுவரன்,ராஜன் ஆகியோர் வில்லத்தனம் செய்யப் போகிறார்கள்.
ஷாஜி கைலாஷ் இயக்கவுள்ளதால், பல மலையாளத் தலைகளும் படத்தில் தென்படுமாம். பாலகுமாரன் வசனம்எழுதுகிறார்.
ஷாஜி கைலாஷ் தான் விஜயகாந்தின் "வாஞ்சிநாதன்" படத்தை இயக்கிவர். அசோகாவுக்கு பாடல்கள் எழுதப்போவது வைரமுத்து. வைரமுத்துவின் வைர வரிகளை, ஏ.ஆர்.ரஹ்மான் இசையாக்குகிறார்.
தென்காசி பாட்டி:
படத்துக்கு என்ன தான தலைப்பு வைப்பது என்று ஒரு வரைமுறை இல்லாமல் போய்விட்டது.
தமிழ், இங்கிலீஷ் என பல மொழிகளில் தலைப்பு வைத்து இப்போது பெரும் தலைப்புப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால்,ஒரு படத்துக்கு தென்காசி பாட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்.
வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாமன், வரதன் தயாரிக்கிறார்கள். படத்தை இயக்குகிறார் புதுமுகடைரக்டர் தர்மா.
டைரக்ஷனுக்குத்தான் இவர் புதுசு. பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். படத்திற்கு கதை,வசனம், திரைக்கதை எழுதியுள்ளார் வி.சி.குகநாதன்.
வடிவேலு தவிர, "ஆச்சி" மனோரமா, செந்தில், வையாபுரி, சார்லி, தாமு, சின்னிஜெயந்த் என ஒரு காமெடிப்பட்டாளமே திரட்டப்பட்டிருக்கிறது.
அப்படின்னா, படத்தில் "காமெடி" இருக்கோ இல்லையோ, "கடி", "கொத்து", "வெட்டு", "அரிப்பு" போன்ற எல்லாம்இருக்கும்.
ஹீரோ, ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. இது வி.சி.குகநாதனுக்கு 225-வது படமாம்.


Click it and Unblock the Notifications











