'ஏன் போட்டோ எடுத்தே?' - ஆண்ட்ரியாவின் அலட்டல்

By Shankar

Andriya
சினிமா விழாக்களுக்கு வரும் திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகைகளை வளைத்து வளைத்து போட்டோ எடுப்பது, புகைப்படக்காரர்களின் வாடிக்கை.

இதனைப் புரிந்து கொண்டு, பல நடிகைகளும் படு கவர்ச்சியான உடைகளில் வருவார்கள். புகைப்படக்காரர்களுக்கும் நடிகைகளுக்குமான ஒரு ரகசிய புரிந்து கொள்ளல் இது!

ஆனால் சில நடிகைகள் இப்படி போட்டோ எடுப்பதை விரும்புவதில்லை. அதாவது தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தக் கெடுபிடி. ஆந்திரா, மும்பை என்று போனால் அதிகபட்ச ஆடைக் குறைப்பும், அட்டகாச போஸ்களும் தரத் தயங்குவதில்லை.

இப்படிப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதல் இரு இடங்கள் அனுஷ்கா மற்றும் ஆன்ட்ரியாவுக்குத்தான்.

அனுஷ்கா தன்னை படமெடுக்க வருபவர்களிடம், எக்ஸ்ட்ரா பைசா தருவீங்களா, என்று கேட்டு மிரள வைக்கிறார் என்றால், ஆண்ட்ரியா கதை தனி. தன்னைப் படமெடுத்த புகைப்படக்காரரை கூப்பிட்டு மிரட்டி, எடுத்த போட்டோவையே அழிக்க வைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த எக்ஸ்மேன் பிரிமியர் ஷோவுக்கு வந்திருந்த ஆண்ட்ரியாவை ஒரு இணையதள புகைப்படக்காரர் படமெடுத்துவிட்டார். உடனே அவரை அருகில் அழைத்த ஆண்ட்ரியா, "என்னைக் கேட்காமல் எப்படி படமெடுக்கலாம்" என கோபமாகக் கேட்டதுடன், கேமிராவைப் பிடுங்கி, அதிலிருந்த புகைப்படங்களை அழித்துவிட்டாராம்.

உடனே பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த நடிகர் ஜெயம் ரவி, ஆண்ட்ரியாவுக்காக பரிந்து கொண்டு வந்துவிட்டார்.

"தம்பி குடிச்சிருக்கியா.. அதெப்படி நீ எங்களை போட்டோ எடுக்கலாம். நீ எந்தப் பத்திரிகை, ஐடி கார்ட் காட்டு...?" என்றெல்லாம் எகிற, அமைதியாக ஒதுங்கிப் போய்விட்டாராம் புகைப்படக்காரர்.

"புகைப்படமெடுக்க வருந்தி வருந்தி அழைத்த சத்யம் சினிமா நிர்வாகத்தையல்லவா அவர் நியாயமாகக் கேட்டிருக்க வேண்டும். இன்னொன்று இந்த பிரிமியர் ஷோ சமாச்சாரமெல்லாமே ஒரு விளம்பரம்தானே... விளம்பர நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு புகைப்படம் எடுக்கக் கூடாது என்றால் எப்படி!", என்று குமைந்தார் சம்பந்தப்பட்ட புகைப்படக்காரர்!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X