அஞ்சலி ஆக்ரோஷமாக வீசிய தோசைக்கல்.. நெற்றியில் அடிபட்டு துடித்த இயக்குநர்!
இயக்குனர் ஆக்ஷன் சொன்னதும் ஆக்ரோஷமாக நடித்த அஞ்சலியால் இயக்குனருக்கு காயம் ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: லிசா3டி என்ற படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனருக்கு நடிகை அஞ்சலி நெத்தியடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் லிசா 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்ஸன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கும் இப்படத்தில், ஏமாளி படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் திரைப்படம் லிசா. இப்படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டது.
அப்போது, 3டி எஃபெக்ட்டில் தோசைக்கல்லை தூக்கி கேமரா முன் அஞ்சலி வீசும் காட்சியை படமாக்கினர். ஆக்சன் என்றதும் ஆக்ரோஷமாக தோசைக்கல்லை கேமராவை நோக்கி வீசினார் அஞ்சலி. அது எதிர்பாராத விதமாக பறந்து வந்து கேமரா அருகில் நின்ற இயக்குனரின் நெத்தியில் பட்டு புருவம் கிழிந்தது.
ரத்தம் வழிய... வழிய... வலியை பொருட்படுத்தாமல் அந்த ஷாட் எப்படி வந்துள்ளது என பார்த்த இயக்குனர் 3டி பிரமாதமா வந்திருக்கு என பாராட்டிவிட்டு மருத்துமனைக்கு சென்றுள்ளார். நெத்தியில் தையல் போட்டு திரும்புவதற்கு நேரமாகி விட்டதால் அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இயக்குனரின் நெற்றியை கிழிக்கும் அளவிற்கு ஆக்ரோஷமாக நடித்த அஞ்சலியைக் கண்டு மொத்த படக்குழுவுமே ஒரு கணம் திகைத்துப்போனது.
இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். மறைந்த நடிகர் ரகுவரனின் இடத்தை இவர் தமிழில் பிடிப்பார் என தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











