மலை உச்சியில் நடிக்க பயந்து யாருக்கும் தெரியாமல் தலைதெறிக்க ஓடிய ஹீரோயின்

By Siva

சென்னை: மலை உச்சியில் நின்று நடிக்க பயந்து கொண்டு நடிகை அனுபமா பிரகாஷ் யாரிடமும் கூறாமல் தப்பியோடிவிட்டார்.

ஏ. கேசவன் இயக்கி வரும் படம் அவளுக்கென்ன அழகிய முகம். கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு கொடைக்கானல் சென்றது.

மலை உச்சி

மலை உச்சி

கொடைக்கானலில் மலை உச்சியில் ஹீரோயின் அனுபமா பிரகாஷை நிற்க வைத்துள்ளார் இயக்குனர். உச்சியில் நின்று நடனம் ஆட அனுபமா பயந்துள்ளார். ஆனால் உச்சியில் தான் அழகாக இருக்கிறது என்று இயக்குனர் ஃபீல் பண்ணியதால் அனுபமாவுக்கு பயத்தை மறைத்துக் கொண்டு நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டெல்லி

டெல்லி

படப்பிடிப்பின் இடையே நான் ஹோட்டல் அறை வரை சென்று வருகிறேன் என்று இயக்குனரிடம் கூறிவிட்டு அனுபமா கிளம்பியுள்ளார். அனுபமா திரும்பி வந்துவிடுவார் என்பதால் பேக்கப் செய்யாமல் காத்திருந்திருக்கிறது படக்குழு. நேரம் ஆக ஆக ஹீரோயினை காணவில்லை. இதையடுத்து அவரை தேடிச் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அனுபமா

அனுபமா

அனுபமா ஹோட்டல் அறைக்கு சென்று தனது பொருட்களை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மதுரை விமான நிலையத்திற்கே சென்றுவிட்டாராம். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு பறந்துவிட்டாராம். அனுபமாவின் சொந்த ஊர் டெல்லி என்பது குறிப்பிடத்தக்கது. அனுபமா டெல்லிக்கு சென்ற விஷயம் அறிந்து இயக்குனர் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர்.

சமாதானம்

சமாதானம்

அடுத்த ஃபிளைட்டிலேயே டெல்லிக்கு சென்ற தயாரிப்பாளர் மலை உச்சிக்கு பயந்து இப்படியாம்மா ஓடி வருவது என்று அனுபமாவிடம் பேசி அவரை சமாதானம் செய்துள்ளார். அதன் பிறகு அனுபமாவை அழைத்து வந்து படப்பிடிப்பை தொடர்ந்துள்ளனர். ஆளாளுக்கு ஒரு பயம். இந்த அனுபமாவுக்கு உயரம் என்றால் பயம். அதற்கு என்ன செய்ய முடியும் பாவம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X