»   »  அனுராதா Vs

அனுராதா Vs

Subscribe to Oneindia Tamil

மகா ஆட்ட புகழ் அனுராதா, கேப்டன் விஜயகாந்த்தை வம்புக்கு இழுப்பதைப் போல ஒரு சூப்பர் கெட்டப்கேரக்டரில் நடிக்கிறார்.

ஒரு காலத்தில் கேப்டனுக்கு வலது கரமாக இருந்த மன்சூர் அலிகான் தான் தனது படத்தில் இந்த கேரக்டரைவைத்துள்ளார்.

மகா சேட்டைக்காரரான மன்சூர் அலிகான் நீண்ட நாளைக்குப் பிறகு நடித்து, இயக்கி, தயாரித்து அசத்தும் படம்என்னைப் பார் யோகம் வரும். இதில் கன்னடத்திலிருந்து மஞ்சு என்ற மந்திர மோகினியை அழைத்து வந்துதிறமை காட்ட வைத்துள்ளார்.

மஞ்சுவை பக்கத்திலேயே உட்கார வைத்து வசனங்களை எழுத்துக் கூட்டி வாசித்துக் காண்பித்து பாடம் நடத்திநடிக்க வைக்கிறார் மன்சூர்.

இப்படி மஞ்சுவுக்காக அதிக நேரம் ஒதுக்கி வருவதால் படப்பிடிப்பு ஆமைக் குட்டி வேகத்தில் படு நிதானமாகதவழ்ந்து வருகிறது. மேலும் பிரியங்கா சைலூ என்ற செம பிகரும் இருக்கிறார்.

இப்படத்தில் முன்னால் குலுக்கல் திலகம் அனுராதாவுக்கு அல்டாப்பான ஒரு கேரக்டரை கொடுத்துள்ளார் மன்சூர்.

அம்மணி ஒரு கட்சி ஆரம்பிக்கிறார். பெயர் என்ன தெரியுமோ.? தோ.மு.தி.க. எங்கேயோ இடிப்பது போலஇருக்கிறதல்லவா? இந்தக் கட்சி 234 சட்டசபைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறதாம், அதுவும் தனித்து. ஆனால்வெற்றி பெறுவது கட்சியின் தலைவியான அனுராதா மட்டுமே.

இப்ப தெரிஞ்சிருக்குமே மன்சூர் யாரை வாருகிறார் என்று. கேப்டனால் சினிமாவில் அடையாளம்காட்டப்பட்டவர் மன்சூர். அவருடன் நடித்த கேப்டன் பிரபாகரன் படம்தான் மன்சூரை, மகா வில்லனாக தமிழ்சினிமாவில் உலவ விட்டது.

மன்சூரும் அந்த நன்றி மறவாமல் கேப்டன் பின்னாலேயே சுற்றித் திரிந்தார். ஆனால் விஜய்காந்தின் மச்சான்தலையெடுத்ததில் இருந்து அவரது பழைய பிரண்ட் எல்லோரும் வெட்டி விடப்பட்டுவிட்டனர்.

முதலில் இப்ராகிம் ராவுத்தர், பின்னர் மன்சூர் என விஜய்காந்தின் அந்த கால தோழர்கள் எல்லோரும்பிரிந்துவிட்டனர். சமீப காலமாக மன்சூருக்கும், கேப்டனுக்கும் இடையே மோதலும் நடந்து வருகிறது.

கேப்டனை சரமாரியாக விமர்சித்துப் பேசியும் வருகிறார் மன்சூர். அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் தனதுபடத்தில் தேமுதிகவையும், விஜயகாந்த்தின் வெற்றியையும் நையாண்டி செய்து நக்கலான கேரக்டரைவைத்துள்ளார்.

சரி, படத்தில் மன்சூர் கேரக்டரின் பெயர் என்ன தெரியுமா?

ஜெகதல பிரதாப வீரபத்ர ஞான தேசிக கருமாரி கந்தப்ப சிவ சிங்கார வேல வருஷ நாட்டு வேங்கைமான் மதுரமதன கோபால ஜவ்வாது சாமுண்டீஸ்வரன் என்கிற ஜெகா!

அட அய்யா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil