அனுஷ்காவுக்கு சுளுக்கு.. படப்பிடிப்பு ரத்து!

By Shankar

ருத்ரமாதேவி படத்தில் சண்டைக்காட்சியில் நடித்த போது அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தெலுங்கில் 'ருத்ரமாதேவி', 'பாகுபலி' என இரு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்த இரு படங்களுமே தமிழிலும் வெளியாகவிருக்கின்றன.

'ருத்ரமாதேவி'யில் ராணியாக நடிக்கும் அனுஷ்கா, வாள் சண்டை, குதிரை சவாரி காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது.

Anushka suffers from ankle sprain

ஏற்கெனவே யோகா டீச்சர் என்பதால், இதற்கான பயிற்சிகளை ஒரு மாதத்தில் கற்றுக் கொண்டார். தனித்தனி ஸ்டனட் நடிகர்கள் இதற்காக அவருக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

ருத்ரமாதேவி படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனுஷ்கா பங்கேற்ற வாள் சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

கொஞ்சம் கடினமான சண்டைக் காட்சி அது. ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டது. மிகுந்த வலியால் அவதிப்பட்ட அவர், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இப்போது அனுஷ்கா ரெஸ்ட் எடுத்து வரும் அனுஷ்கா, தினமும் புத்தூர் தைலம் தேய்த்து சிகிச்சை பெற்று வருகிறாராம்!

இதனால் ரஜினி, அஜீத் படங்களில் நடிக்க அவர் கொடுத்த தேதிகள் தள்ளிப் போய் உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X