»   »  1 ஹீரோ, 2 குலோப் ஜாமூன்கள்!

1 ஹீரோ, 2 குலோப் ஜாமூன்கள்!

Subscribe to Oneindia Tamil

திடீர் திடீரென வந்து படம் எடுத்து விட்டு திரும்ப லண்டனுக்குப் பறந்து விடும்குரோதம் பிரேம் மீண்டும் ஒரு படம் எடுக்க கோடம்பாக்கத்திற்கு வந்துள்ளார்.இம்முறை பிரேம் எடுக்கப் போகும் படம் அசோகா.

பிரேம் மேனன் என்பதுதான் பிரேமின் முழுப் பெயர். அடிப்படையில் மலையாளியான பிரேம்லண்டனில் சொகுசாக செட்டிலான குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமாவின் மீது தீராதகாதல் கொண்ட பிரேம், தனக்கு ஓய்வு கிடைக்கும்போது கோடம்பாக்கத்திற்கு வந்துவிடுவார்.

படு நிதானமாக ஒரு படத்தை எடுத்து வெளியே விட்டு அதை சக்ஸஸ் ஆக்கியும்காட்டி விட்டு ஊரைப் பார்க்க கிளம்பி விடுவார். பிரேம் எடுத்த முதல் படம்தான்குரோதம். அந்தப் படம் வெற்றிப் படமாகவே அடுத்தடுத்து வர்றார் சண்டியர்,குரோதம்-2, வீரமணி என மூன்று படங்களை தானே நடித்து இயக்கினார் பிரேம்.

இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வருகிறார் பிரேம். இந்தப்படத்திற்கு அசோகா என பெயரிட்டுள்ளார். கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாமேபிரேம்தான். கோவையில் படத்தின் பூஜையை சமீபத்தில் நடத்தினார்.

இந்தப் படமும் ஆக்ஷன் படம்தானாம். தேசம் காக்கப் போராடும் ஒரு காக்கிச் சட்டைஅதிகாரி கதையாம் இது.

இதில் பிரேமுக்கு லட்டு கணக்காக இரண்டு ஜோடிகள். ஒருவர் அனுஸ்ரீ.இன்னொருவர் பூஜா பாரதி. இருவரும் நச் பார்ட்டிகள். கவர்ச்சிக்காகவே இருவரையும்படத்தில் சேர்த்திருக்கிறாராம் பிரேம்.

படம் முழுக்க கன் பைட்டும், அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும் இருக்கும்என்பதால், ரசிகர்களுக்கு வெறுத்துப் போய் விடக் கூடாது என்பதற்காக இந்த மினரல்வாட்டர் பாட்டில்களை படத்தில் சேர்த்திருக்கிறாராம் பிரேம்.

பூஜை நாளன்று அனுஸ்ரீயையும், பூஜாவையும் பார்த்தபோது அவர்களது பங்குபடத்தில் என்ன என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து போனது.

தொடர் மழை, பனி என தமிழகமே நடுங்கிப் போய்க் கிடக்கிறது. இந்த நேரத்தில்பூஜா பாரதி, அனுஸ்ரீ என இரு பெரும் ஐஸ் பார்களை தூக்கி ரசிகர்களின் நெஞ்சில்வைத்து அவர்களது கூட்டை குலைக்கப் போகிறார் பிரேம்.

நம்ம ரசிக மக்காக்கள் இதையும் தாங்கிக்குவாங்கப்பா..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil