»   »  மாட்டிக் கொண்ட அபர்ணா!

மாட்டிக் கொண்ட அபர்ணா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உள்ளூர் போலீஸ்காரர்களிடம் மாட்டிக் கொண்டாலே நமக்கு விதிர்த்துப் போய் விடும். ஆனால் வெள்ளைக்காரபோலீஸாரிடம் மாட்டி வெளிறிப் போய் திரும்பியுள்ளனர் அபர்ணா உள்ளிட்ட நெஞ்சில் படக் குழுவினர்.

பணப் பசை கொண்ட பார்ட்டியான அபர்ணாம் பணம் பாதியை உள்வாங்கி வெளியான படம்புதுக்கோட்டையிலிருந்து சரவணன். இப்படத்தில் கவனிப்புக்குரியதாக அபர்ணாவின் கவர்ச்சி மட்டுமேஇருந்தது. தாரிகாவின் நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு என்ற கிளாமர் களியாட்டம் ரசிகர்களைக் கவர்ந்தது.ஆனால் படம் பனால் ஆகி விட்டது.

அதன் பிறகு அபர்ணா கதையை செலக்ட் செய்து நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெஞ்சில் ஜில்ஜில் என்ற படத்தில் நடித்து வருகிறார் அபர்ணா. அவருக்கு ஜோடி விடலைப் பையன் நவ்தீப். ரஞ்சிதா முக்கியவேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பெயரை இப்போது நெஞ்சில் என்று சுருக்கி விட்டார்கள். படத்தின் பெரும் பகுதியை லண்டனில்வைத்து சுட்டுள்ளனர். கடந்த வாரம் நவ்தீப்பும் அபர்ணாவும் சேர்ந்து ஆடிப் பாடிய டூயட்டை சுட்டார்கள்.

லண்டனின் முக்கிய இடத்தில் நவ்தீப், அபர்ணா, இயக்குநர் செல்வா மற்றும் படக் குழுவினர் கூடி ஷூட்டிங்கைமேற்கொண்டிருந்தனர். அப்போது லண்டன் போலீஸார் திடீரென அங்கு வந்து படக் குழுவினரை சுற்றிச்சூழ்ந்தனர்.

பொது இடத்தில் படப்பிடிப்பை நடத்த தேவையான அனுமதியை நெஞ்சில் குழுவினர் பெறவில்லை என்று கூறியபோலீஸார் படப்பிடிப்பை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். ஆனால் தங்களிடம் அனுமதி உள்ளதாககூறிய படக் குழுவினர் அதுதொடர்பான அனுமதிக் கடிதம் லண்டனில் இன்னொரு இடத்தில் இன்னொருவரிடம்இருப்பதாக விளக்கினர்.

ஆனால் இதை லண்டன் போலீஸார் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. கடிதத்தைக் காட்டினால்தான் ஆச்சுஎன்று காய்ச்சி எடுத்து விட்டனர். இதையடுத்து கடிதத்துடன் இருந்த அந்த நபரை அவசரமாக வரவழைத்தனர்.அவர் வரும் வரை படக் குழுவினரை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

கடிதத்துடன் அந்த தயாரிப்பு நிர்வாகி வந்தவுடன்தான் படக்குழுவினரை விடுவித்தனராம். கிட்டத்தட்ட கைதுசெய்யப்பட்ட நிலையில் படக்குழுவினர் பீதியடைந்த நிலையில் இருந்தனராம்.

கடிதம் வரும் வரை அபர்ணாவிடம் லண்டன் போலீஸார் கடலை போட்டு பொழுதைக் கழித்தனராம்.அபர்ணாவும் வெளிறிய முகத்தில் வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு லண்டன் போலீஸாரிடம்பேசிக் கொண்டிருந்தாராம்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil