அரண்மனை 3 படப்பிடிப்பில் திகில்.. இரவில் குதிரை கனைக்கும்… பயந்த படக்குழு!
சென்னை : அரண்மனை 3 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த திகிலூட்டும் சம்பவங்கள் தற்போது தெரியவந்துள்ளது.
இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோருடன் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அரண்மனை 3 திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

அரண்மனை
சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்த வரவேற்பை அடுத்து, மூன்றாம் பாகத்தை உருவாக்கி ஆயுத பூஜை தினமான இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

திகிலூட்டும்
இந்நிலையில், அரண்மனை 3 படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த அனுபவத்தை கூறியுள்ளார். அதில், குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் மகாரானா ராஜ் ஸ்ரீ அமர் சிங் எனும் ராஜ்புத் அரசரால் 1907ம் ஆண்டு கட்டப்பட்ட வேண்கனியர் பேலஸ் அரண்மனையில்தான் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. அந்த அரண்மனை மிகப்பழமையான அரண்மனை என்றார். ஆனால் இரவு நேரத்தில் திடீரென குதிரை கனைத்துக்கொண்டே அரண்மனையைச் சுற்றி வரும் சத்தம் கேட்கும், இதை கேட்டு படக்குழுவினர் பலரும் பயந்துள்ளனர் என்றார்.

25வது படம்
இதேபோல, இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் சி.சத்யா கூறியுள்ளார். இது எனது 25-வது படம். இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. 20 நாட்களில் முடிக்குமாறு சுந்தர் சி என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டன.

எமோஷனல் காட்சிகள்
இப்படத்திற்கு பின்னணி இசைமிகவும் அற்புதமாக வந்துள்ளது. அரண்மனை படத்தின் மற்ற பாகங்களைவிட இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருக்கும் என தெரிவித்தார். இப்படம் இன்று வெளியாகி இருக்கு அனைவரும் சந்தோஷமா எஞ்சாய் பண்ணி பாருங்க என்றார். இந்த திரைப்படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











