பைனான்ஸ் பஞ்சாயத்து ஓவர்... மீண்டும் தொடங்கியது அரவிந்த்சாமியின் வணங்காமுடி ஷூட்டிங்

By

சென்னை: நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த வணங்காமுடி படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

தல அஜித்தை அமராவதி மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வா. தலைவாசல், நான் அவன் இல்லை, தோட்டா உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் கடந்த 2017 ஆம் வரும் வணங்காமுடி என்ற படத்தை ஆரம்பித்தார். இதில் அரவிந்த்சாமி, சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, கணேஷ் வெங்கட்ராம், சாந்தினி, தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்தனர்.

பைனான்ஸ்

பைனான்ஸ்

டி.இமான் இசையமைத்தார். மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரித்தார். இதன் ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்தது. முக்கால்வாசி படம் முடிவடைந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னையால் படம் திடீரென்று நின்றது.

இயக்குனர் செல்வா

இயக்குனர் செல்வா

பிரச்னை இப்போது முடியும், அப்போது முடியும் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இயக்குனர் செல்வா, சின்னத்திரை தொடரை இயக்கச் சென்றார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்நிலையில், இந்தப் படத்தின் பைனான்ஸ் சிக்கல் பற்றி தென்னிந்திய திரைப்பட பைனான்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 10 நாட்கள் ஷூட்டிங் நடத்தினால் படம் முடிந்துவிடும் என்று இந்தப் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டது.

மீண்டும் ஷூட்டிங்

மீண்டும் ஷூட்டிங்

இதையடுத்து சங்க நிர்வாகிகள் பிரச்னையை பேசி முடித்தனர். இதையடுத்து இந்தப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X