கஜகஸ்தானில் புத்தாண்டு... முன்னால் சென்ற அருண் விஜய், நவீன்... பின்னால் செல்லும் விஜய் ஆண்டனி
சென்னை: 'அக்னிச்சிறகுகள்' படத்துக்காக நடிகர் அருண் விஜய்யும் இயக்குனர் நவீனும் கஜகஸ்தான் சென்றுள்ளனர். அங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை படமாக்க உள்ளனர்.
மூடர் கூடம் படத்துக்குப் பிறகு அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார் நவீன். அருண்
விஜய், விஜய் ஆண்டனி ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
அக்ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

கடும் பனிப்பொழிவு
ரஷ்யாவின் கடுமையான பனிப்பொழிவில் இதன் ஷூட்டிங்கை முடித்துவிட்டுக் கடந்த சில நாட்களுக்கு முன் திரும்பியது படக்குழு. அங்கு அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா, ஜேஎஸ்கே, சென்ராயன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

அல்மாட்டி
அடுத்து கஜகஸ்தான் செல்ல இருப்பதாக இயக்குனர் நவீன் தெரிவித்திருந்தார். அங்குள்ள அல்மாட்டி நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை 31 ஆம் தேதி இரவு படமாக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

விஜய் ஆண்டனி
இதையடுத்து படப்பிடிப்புக்காக இயக்குனர் நவீன், நடிகர் அருண் விஜய் ஆகியோர் கஜகஸ்தான் சென்றுவிட்டனர். அவர்கள் தவிர படக்குழுவினர் இங்கிருந்து நாளை கஜகஸ்தான் புறப்படுகின்றனர். விஜய் ஆண்டனி புதன்கிழமை புறப்படுகிறார்.

சுவிஸ், ஜெர்மனி
அங்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்திலும் ஜெர்மனியில் சில காட்சிகளைப் படமாக்க உள்ளனர். இதையடுத்து படக்குழு சென்னை திரும்புகிறது. இத்தகவலை இயக்குனர் நவீன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications