உறைபனி குளிரில் குதிரைகளுக்கு நடுவே ஆக்ஷன் ஆவேசம்... தீயாய் பரவும் அருண் விஜய் வீடியோ
சென்னை: 'அக்னிச்சிறகுகள்' படத்துக்காக உறைபனியில் சண்டைக்காட்சி படமாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மூடர் கூடம் படத்துக்குப் பிறகு அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார் நவீன். அருண்
விஜய், விஜய் ஆண்டனி ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
அக்ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

வெளிநாடுகளில்
இது வெளிநாடுகளில் நடக்கும் கதை. படத்தைப் பார்த்தால், ஏன் இத்தனை நாடுகளில் படமாக்குகிறோம் என்பது புரியும். தமிழுக்கு இந்தப் படம் புதியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் நவீன்.

பனிப்பொழிவில்
ரஷ்ய நாட்டில் கடுமையான பனிப்பொழிவில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் திரும்பிய படக்குழு அடுத்து கஜகஸ்தான் செல்வதாகக் கூறியிருந்தது.

அல்மாட்டி நகரில்
அதன்படி கடந்த மாதம் 31 ஆம் தேதி அருண் விஜய், இயக்குனர் நவீன் உட்பட படக்குழுவினர் அங்கு சென்றனர். அங்குள்ள அல்மாட்டி நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை படமாக்கிய படக்குழு, அடுத்து சில காட்சிகளை படமாக்கியது.
நோமட் ஸ்டன்ட்
இந்நிலையில், அல்மாட்டி நகரில் கடுமையான உறைபனிக்கு நடுவில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். கஜகஸ்தானின் புகழ்பெற்ற Nomad Stunt குழுவினர், இதில் பங்கேற்கின்றனர்.

குதிரைகள்
இந்த ஸ்டன்ட் குழுவின், குதிரைச் சண்டைக் காட்சிகள் பிரமிக்க வைப்பதாக இருக்கும். அப்படியொரு காட்சியை இந்த படத்துக்காகப் படமாக்கி வருகின்றனர். இந்த ஆக்ஷன் காட்சிக்கு தயாராவதை நடிகர் அருண் விஜய் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகிறது.
இங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்திலும் ஜெர்மனியில் சில காட்சிகளைப் படமாக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications