அருண்விஜய்யின் ‘AV33‘ பழனியில் விறுவிறுப்பான படப்பிடிப்பு … விரைந்து முடிக்க படக்குழு திட்டம் !
சென்னை : அருண்விஜய் நடித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு தற்போது பழனியினில் நடந்து வருகிறது.
இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். சென்னை, பழநி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற பகுதிகளை தொடர்ந்து தற்போது ராமேஸ்வரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திரையரங்குகள் திறக்கப்பட்டதை அடுத்து செப்டம்பர் மாத இறுதிக்குள் படத்தின் அனைத்து பணிகளையும் விறுவிறுப்பாக முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில்
பிரபல நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கி வரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக AV33 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் பழனி சென்ற அருண்விஜய் அங்கு நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

அருண்விஜய்க்கு கையில் காயம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டை காட்சியின் போது அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சில நாட்களாக ஓய்வெடுத்த அவர் காயத்தை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சென்னை, பழநி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற பகுதிகளை தொடர்ந்து தற்போது ராமேஸ்வரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டதை அடுத்து படத்தின் அனைத்து பணிகளையும் விறுவிறுப்பாக முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிரியா பவானி சங்கர் ஜோடி
அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும், பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

ரோட்டுக்கடையில் அருண்விஜய்
சமீபத்தில் நடிகர் அருண்விஜய் பழனியில் உள்ள ரோட்டு கடை ஒன்றில் திடீரென நுழைந்து அங்கு இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும், சாப்பிட என்ன இருக்கு என்று கேட்ட அருண்விஜய், அங்கு போடப்பட்டிருந்த மேஜையில் அமர்ந்து சாப்பிட்டார். அவருடன், படக்குழுவினர் சிலரும் சாப்பிட்டனர். மேலும், அங்கு உணவு பரிமாரிய ஒரு அம்மாவை ஒரு கையால் அணைந்துக்கொண்டும், மற்றொரு கையில் கரண்டியை பிடித்துக்கொண்டு நின்றிருந்தார்.

பல லைக்குகள்
இந்த புகைப்படத்தை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், அதில், ரோட்டுக் கடையில் உணவருந்திய போது..இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த புகைப்படத்தை அனைவரும் லைக் செய்து வருகின்றனர்.

கைவசம் பல படங்கள்
அருண் விஜய் அக்னி சிறகுகள், சினம், பாக்சர் மற்றும் பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் தற்போது திறந்து இருக்கும் சூழலில், திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











