இதுதான் எங்க குடும்பம்.... யானை படப்பிடிப்பு தளத்தில் அருண் விஜய் வெளியிட்ட குரூப் செல்பி!
சென்னை : தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம் இப்போது தமிழ் சினிமாவில் ஆக்சன் கதாநாயகனாக மாறியுள்ளார் நடிகர் அருண் விஜய்.
முதல் முறையாக இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் திரைப்படத்திற்கு யானை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
யானை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் சூழலில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அருண் விஜய் வெளியிட்ட குரூப் செல்பி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார்
வில்லனாக தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த அருண் விஜய் இப்பொழுது கதாநாயகனாக கலக்கிக் கொண்டு வருகிறார். அடுத்தடுத்து அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வர ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். தடம்,குற்றம் 23,என அருண் விஜய் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படங்கள் மற்ற மொழியிலும் ரீமேக் ஆகி வருகிறது.

மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்
குற்றம் 23 வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் திரைப்படத்திற்கு பார்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அருண்விஜய் ராணுவ வீரராக நடித்து வருகிறார் ஜோடியாக ரெஜினா கஸன்ட்ரா இணைந்துள்ளார்.
Recommended Video

வில்லேஜ் கதை களத்தில்
சூர்யா, விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி முதல் முறையாக அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்து யானை என்ற படத்தை இயக்கி வருகிறார். பக்கா வில்லேஜ் கதை களத்தில் உருவாகி வரும் யானை படப்பிடிப்பு இப்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த யானை படப்பிடிப்பு இப்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

யானை குரூப் செல்பி
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் முழுவதும் அருண்விஜய் வேட்டி சட்டையில் மிகக் கம்பீரமாக தோன்றுகிறார். இந்நிலையில் சமீபத்தில் காரைக்குடியில் யானை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கியது. இயக்குனர் ஹரியின் வழக்கமான பார்முலாவில் ஆக்சன் கலந்த கமர்சியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் இருந்து யானை குடும்பம் இதுதான் என அருண் விஜய் வெளியிட்டுள்ள குரூப் செல்பி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











