யானை படத்தின் சூட்டிங் ஸ்பாட்... உற்சாக புகைப்படம் வெளியிட்ட அருண் விஜய்

சென்னை : நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

அவரது நடிப்பில் பார்டர் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள யானை படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தொடர்ந்து ஹிட் படங்கள் வெளியாகி வருகின்றன. தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து அவர் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார். கிராமத்து கதாபாத்திரங்களிலும் சிட்டி கதாபாத்திரங்களிலும் அவர் சிறப்பாக பொருந்தி வருகிறார். வில்லன் கதாபாத்திரமும் அவருக்கு கைகொடுத்தது.

ஹரியுடன் இணைந்த அருண் விஜய்

ஹரியுடன் இணைந்த அருண் விஜய்

இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் பார்டர் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக தன்னுடைய தங்கை கணவர் இயக்குநர் ஹரி இயக்கத்தில் முதல்முறையாக இணைந்துள்ளார் அருண் விஜய்.

யானை படம்

யானை படம்

யானை என்று இந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஹரியின் சிங்கம் படம் சிறப்பான வெற்றிப்படமாக உள்ள நிலையில் தற்போது அவரது படத்திற்கு யானை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

ராதிகா, சமுத்திரகனி யோகிபாபு, கேஜிஎப் புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹரி படத்தில் அதிகமான நட்சத்திரங்கள் இருப்பது வழக்கமானது.

 புகைப்படத்தை பகிர்ந்த அருண் விஜய்

புகைப்படத்தை பகிர்ந்த அருண் விஜய்

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அனைத்து நடிகர்களும் இணைந்துள்ள புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் விஜய் -ஹரி கூட்டணி

அருண் விஜய் -ஹரி கூட்டணி

மேலும் அடுத்தடுத்து படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவையும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான திரைக்கதைக்கு சொந்தக்காரர் ஹரி. இவரது இயக்கத்தில் முதல்முறையாக அருண் விஜய் இணைந்துள்ளார். படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

Recommended Video

அடுத்து Balaji Sakthivel sir படத்துல Lead டா நடிக்குறேன்| Actor Vijayan Sai Dinesh | Filmibeat Tamil
ஆக்ஷன் கமர்சியல் படம்

ஆக்ஷன் கமர்சியல் படம்

குடும்பங்கள் கொண்டாடும் ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பார்டர், வா டீல் படங்கள் அடுத்தடுத்து அருண் விஜய் நடிப்பில் ரிலீசாக உள்ள நிலையில், யானை படமும் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X