சூட்டிங் ஸ்பாட்
நடிகர் அருண்குமார் தனது பிறந்த நாளை ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்த "ஜனனம்" படப்பிடிப்பில் கேக் வெட்டிக்கொண்டாடினார்.
அருண்குமார் நடித்து வரும் "ஜனனம்" படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு பிறந்த நாள் என்பதால் படப்பிடிப்பு செட்டிலேயே அதைக் கொண்டாடஏற்பாடு செய்யப்பட்டது.
பிரமாண்ட கேக் ஆர்டர் செய்யப்பட்டது. அருண்குமாரின் தந்தை விஜயக்குமார், தாயார் முத்துக்கனி(விஜய்குமாரின் முதல் மனைவி) ஆகியோரின் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்அருண்குமார்.
நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோயின் பிரியங்கா திரிவேதி, சார்லி, உதயா, தயாரிப்பாளர்கள் அருள் மூர்த்தி, பிரேம்கலாட், டைரக்டர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அருண்குமாரை வாழ்த்தினர்.
More from Filmibeat
actor arunkumar avm studio glamour hero jananam sex shop tamil news tamilnadu thatstamil vijayakumar


Click it and Unblock the Notifications











