ஆர்யா,நலன் குமாரசாமி இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

சென்னை : சூது கவ்வும், காதலும் கடந்து போகும் மட்டும் குட்டி ஸ்டோரி ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் நலன் குமாரசாமி அடுத்த திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யா மீது மிகப்பெரிய கவனம் திரும்பி இருக்க முதல் முறையாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்க உள்ளார்.

ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்க இப்பொழுது ஷூட்டிங் குறித்த முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

குறும்படங்கள் வாயிலாக

குறும்படங்கள் வாயிலாக

நடிகர் விஜய் சேதுபதிக்கு திருப்புமுனை படமாக அமைந்த சூது கவ்வும் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நலன் குமாரசாமி. குறும்படங்கள் வாயிலாக சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்த நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பிரபல கொரியன் படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றது போல கதை களத்தை அமைத்துத் மிகச்சிறப்பாக இயக்கி இருப்பார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்

இந்நிலையில் நீண்ட காலமாக படங்களை இயக்காமல் இருந்த நலன் குமாரசாமி குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் ஒரு பகுதியை இயக்கியிருந்தார். இப்பொழுது அடுத்ததாக புதிய திரைப்படத்தை இயக்கவும் தயாராகி வருகிறார் அந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

முதற்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்ட நிலையில் இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆர்யாவுக்கு சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. அதைத்தொடர்ந்து ஆர்யாவின் மீது கவனம் திரும்பி இருக்க அடுத்ததாக அரண்மனை 3, எனிமி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.

நவம்பர் மாதம் ஷூட்டிங்

நவம்பர் மாதம் ஷூட்டிங்

இவ்வாறு ஆர்யாவுக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வெற்றிகளை குவித்து வரும் சூழலில் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் இந்த திரைப்படம் ஆக்சன் கதையில் உருவாகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரியவந்துள்ளது. விரைவில் இதில் நடிக்க உள்ள இதர நடிகர் நடிகைகளின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X