‘ஆரம்பம்’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜீத்.. பிண்ணனியில் ஆர்யா..?
சென்னை: விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆரம்பம்'. இப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிக் கொண்டார் அஜீத். பின் ஒருவழியாக அதிலிருந்து மீண்டு மீதிப் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார்.
இப்படத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா மற்றும் டாப்சி எனப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது. படத்தில் குறும்புக்கார இளைஞராக நடித்துள்ளாராம் ஆர்யா.
ஆரம்பம் படம் குறித்து தனது படப்பிடிப்பு அனுபவங்களை, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார் விஷ்ணுவர்த்தன். அதில் அஜீத்தின் அந்த விபரீத விபத்தின் பிண்ணனியில் ஆர்யாவின் பங்களிப்பு இருந்ததாகக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது...

அஜீத்-ன் ‘ஆரம்பம்’....
கடந்த வருடத்தில் தொடங்கப்பட்டது இப்படத்திற்கான படப்பிடிப்பு. பெயரிடப்படாமலேயே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த இப்படத்திற்கு சமீபத்தில் தான் ஆரம்பம் எனப் பெயர் சூட்டப் பட்டது.

பயங்கரமான சண்டைக்காட்சி...
படு பயங்கரமான சண்டைக் காட்சி ஒன்று இப்படத்திற்காக மும்பையில் படமாக்கப் பட்டது. அதில் அஜீத் ஓடும் ஒரு காரிலிருந்து மற்றொரு காரில் தாவுவது போன்ற காட்சி படமாக்கப் பட்டது.

ஆக்ஷன் காட்சியில் அடி...
அக்காட்சியைப் படமாகும் போது எதிர்பாரா விதமாக அஜீத் விபத்தில் சிக்கினார். அதில் அவரது வலது காலில் அடிபட்டது.

காரோட்டிய ஆர்யா...
அந்தக் காரை ஓட்டிச் சென்றது ஆர்யா தான். அந்தக் காரில் சிக்கி தான் அஜீத்திற்கு அடிபட்டது.

சின்சியர் நடிகர்...
அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களோடு அஜீத் தப்பித்தார். அதனால், வலியைப் பொறுத்துக் கொண்டு சின்சியராக நடிப்பைத் தொடர்ந்தார் எனப் பாராட்டியுள்ளார் விஷ்ணுவர்த்தன்.

வீரத்திற்குப் பிறகு....
அஜீத் தற்போது சிறுத்தை சிவாவின் ‘வீரம்' படத்திலும் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த பிறகு, அவர் ஆபரேஷன் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











