கேப்டன் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.. கூலாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

சென்னை : வித்தியாசமான சயின்டிஃபிக் கதைகளை இயக்கி வெற்றிகளை கொடுத்து வருபவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்

ஆர்யா நடிப்பில் வெளியான ரெடி என்ற படத்தை கடைசியாக இயக்கி இருந்தார்.

இப்பொழுது மீண்டும் ஆர்யாவுடன் இணைந்து கேப்டன் என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதையடுத்து படக்குழு ஐஸ்கிரீம் சாப்பிட்டு கடைசிநாள் படப்பிடிப்பை என்ஜாய் செய்த வீடியோவை நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார்

தோல்வி படமாக அமைந்தது

தோல்வி படமாக அமைந்தது

நடிகர் ஆர்யா பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்த சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்த படத்தில் குத்துச் சண்டை வீரராக ஆர்யா முழு ஈடுபாட்டையும் கொடுத்து இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். சார்பட்டா பரம்பரை கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து ஆர்யாவுக்கு அரண்மனை3 வெளியானது ஆனால் அரண்மனை முதல் இரண்டு பாகங்களை போல அரண்மனை 3 ரசிகர்களை கட்டாயம் கவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை மாறாக தோல்வி படமாக அமைந்தது.

சயின்டிஃபிக் கதையில்

சயின்டிஃபிக் கதையில்

டிக் டிக் டிக், டெடி என வித்தியாசமான சயின்டிஃபிக் கதைகளை இயக்கிய தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான டெடி என்ற படத்தை இயக்கி இருந்தார். பேசும் டெடியின் குறும்புத்தனமான நடிப்பு ஆர்யா,சாயிஷா காதல் என மிகவும் வித்தியாசமான கதை களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்திருப்பார்.

கேப்டன்

கேப்டன்

இந்நிலையில் மீண்டும் சக்தி சௌந்தரராஜன் ஆர்யா கூட்டணி இணைந்துள்ளது. இந்த முறையும் சயின்டிஃபிக் கதையை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இப்படத்திற்கு கேப்டன் என டைட்டில் வைத்துள்ளார். ஆக்சன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் நடிகை சிம்ரன்,காவ்யா ஷெட்டி,ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். டி இமான் இசையமைக்கிறார்.

ஐஸ்கிரீம் சாப்பிட்டு நிறைவு செய்த படக்குழு

ஐஸ்கிரீம் சாப்பிட்டு நிறைவு செய்த படக்குழு

பரபரப்பாக நடைபெற்று வந்த கேப்டன் படப்பிடிப்பு இப்பொழுது நிறைவு பெற்றுள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் கேப்டன் கடைசி நாள் படப்பிடிப்பை கூலாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு நிறைவு செய்த படக்குழுவின் அழகிய வீடியோவை சிம்ரன் இப்பொழுது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X